Published:Updated:

பெஷாவர் தாக்குதலுக்குக் காரணமான தலிபான் தலைவர் பஸ்லுல்லா உயிரிழப்பு?

பெஷாவர் தாக்குதலுக்குக் காரணமான தலிபான் தலைவர் பஸ்லுல்லா உயிரிழப்பு?
பெஷாவர் தாக்குதலுக்குக் காரணமான தலிபான் தலைவர் பஸ்லுல்லா உயிரிழப்பு?

பெஷாவர் தாக்குதலுக்குக் காரணமான தலிபான் தலைவர் பஸ்லுல்லா உயிரிழப்பு?

பெஷாவர் தாக்குதலுக்குக் காரணமான தலிபான் தலைவர் பஸ்லுல்லா உயிரிழப்பு?

இஸ்லாமாபாத்:  பாகிஸ்தானின் ராணுவப்பள்ளி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலுக்கு காரணமான தலிபான் தலைவர் பஸ்லுல்லா,வான்வழித் தாக்குதலில் பலியானார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

பாகிஸ்தானில் ஜனநாயக அரசை வீழ்த்தி விட்டு  ` இஸ்லாமிய ஆட்சி` யை அமல்படுத்தும் நோக்கில், தெக்ரிக்–இ–தலிபான் (பாகிஸ்தான் தலீபான்) அமைப்பு போராடி வருகிறது. ஆப்கானிஸ்தான் தலிபான் இயக்கத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, பாகிஸ்தானின் வடமேற்கில் ஆப்கானிஸ்தான் எல்லையோர பகுதியான வஜிரிஸ்தான் உள்ளிட்ட மண்டலங்களில் தளங்களை அமைத்துச்  செயல்பட்டு வருகிறது.

தெற்கு வஜிரிஸ்தான் மற்றும் கைபர் மண்டலங்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் தீவிரவாதிகளுக்கு எதிராக கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி வான்வழி தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தானில் கடந்த ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி பெஷாவர்  நகரத்தில் உள்ள ராணுவ பள்ளிக்குள் புகுந்த தலீபான் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 140 க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் உட்பட 150 பேர் பலியாயினர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தீவிரவாதிகள் மீதான தாக்குதலை பாகிஸ்தான் ராணுவம் முடுக்கி விட்டுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தானின் பெஷாவர் நகருக்கு மேற்கே கைபர் மண்டலத்துக்கு உட்பட்ட திரா பள்ளத்தாக்கில் தீவிரவாதிகளின் ஏராளமான முகாம்கள் உள்ள பகுதியை குறி வைத்து கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து வருகின்றன. இதற்கு தீவிரவாதிகளும் பதிலடி கொடுத்து வருவதால், அப்பகுதியில் கடந்த 4 நாட்களாக கடும் சண்டை நடந்து வருகிறது.

பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அதிரடி தாக்குதலில் 80 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதுடன், சுமார் 100 பேர் காயமடைந்தனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகள் அனைவரும் தெக்ரிக்–இ–தலிபான்  மற்றும் அதனுடன் தொடர்புடைய லஷ்கர்–இ–இஸ்லாம் அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆவர். இதைப்போல தெற்கு வஜிரிஸ்தான் மண்டலத்திலும் ராணுவ தாக்குதல் நடந்து வருவதாகவும் உளவுத்தகவல்கள் கூறியுள்ளன.   இந்த பகுதியில் மறைந்திருக்கும் அனைத்து தீவிரவாதிகளையும் ஒழிக்கும் வரை முழுவீச்சில் தாக்குதல் தொடரும் என பாகிஸ்தான் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில்,  பாகிஸ்தான் தலிபான் இயக்க தலைவர் முல்லா மவுலானா பஸ்லுல்லா பலியாகினார் என்று ஊடக தகவல்கள் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் ராணுவமும், இந்த தாக்குதலின் போது பாகிஸ்தான் தலீபான் இயக்க தலைவரான மவுலானா பஸ்லுல்லா, கைபர் மண்டலத்தில் இருந்ததற்கான தெளிவான ஆதாரம் கிடைத்திருப்பதாக தெரிவித்து உள்ளது. இந்த தாக்குதலில் சிக்கிய அவரது உடல் நிலை குறித்து பல்வேறு யூகங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் தலிபான் தீவிரவாத இயக்கம் அதனை மறுத்து உள்ளது. முல்லா மவுலானா பஸ்லுல்லா மரணம் தொடர்பான செய்தி முற்றிலும் அடிப்படையற்றது என்று தலிபான் தீவிரவாத இயக்கத்தின் பல்வேறு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத் தக்கது.

அடுத்த கட்டுரைக்கு