Published:Updated:

இலங்கை: 1,800 முன்னாள் புலிகள் விடுவிப்பு

Vikatan Correspondent

கொழும்பு, அக்.01,2011

இலங்கையில் மறுவாழ்வு பயிற்சியில் ஈடுபட்டிருந்த 1,800 முன்னாள் விடுதலைப் புலிகள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றனர்.

அதிபர் ராஜபக்ஷேவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெற்ற விழாவில், சுமார் 30 முன்னாள் விடுதலைப்புலிகள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஏனையோர் இன்றும் நாளையும் விடுவிக்கப்படுகின்றனர்.

முன்னாள் போராளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள மறுவாழ்வு, உலகுக்கே ஒரு முன் உதாரணமாகத் திகழ்வதாக அதிபர் ராஜபக்ஷே குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற போர் 2009 மே மாதம் முடிவுக்கு வந்தது.

அந்தப் போர் முடிந்த சில மாதங்களுக்குப் பிறகு போரின் இறுதி கட்டத்தில் 11,600-க்கும் சற்று அதிகமான விடுதலைப் புலிகள் தம்மால் கைது செய்யப்பட்டனர் அல்லது சரணடைந்தார்கள் என்று அரசு அறிவித்தது.

தங்கள் பாதுகாப்பில் வைக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு பயிற்சிகளை அளித்து அவர்களை பல்வேறு கட்டமாக அரசு விடுவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.