Published:Updated:

அவமதிப்புக்குப் பின் மரியாதை: வேதியியல் நோபல் வென்ற இஸ்ரேலியரின் வியத்தகு முயற்சி!

Vikatan Correspondent
அவமதிப்புக்குப் பின் மரியாதை: வேதியியல் நோபல் வென்ற இஸ்ரேலியரின் வியத்தகு முயற்சி!
அவமதிப்புக்குப் பின் மரியாதை: வேதியியல் நோபல் வென்ற இஸ்ரேலியரின் வியத்தகு முயற்சி!

அக்.6,2011

அவமதிப்புக்குப் பின் மரியாதை: வேதியியல் நோபல் வென்ற இஸ்ரேலியரின் வியத்தகு முயற்சி!

நடப்பு ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசை, இஸ்ரேலிய விஞ்ஞானி டேனியல் ஷெஸ்ட்மென் வென்றுள்ளார்.

குவாசிகிரிஸ்டல்கள் (QuasiCrystals) என்ற புதிய ரசாயன கட்டமைப்பை கண்டுபிடித்ததற்காக, அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

கண் அறுவைசிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மெல்லிய ஊசிகள், ரேஸர் பிளேடுகள் போன்றவற்றை உருவாக்குவதற்கு, இவரது கண்டுபிடிப்பு துணைபுரிகிறது.

ஹாபியாவின் இஸ்ரேல் தொழில்நுட்ப கல்லூரியைச் சேர்ந்த விஞ்ஞானி டேனியல் ஷெஸ்ட்மெனின் கண்டுபிடிப்பு, ரசாயனத் துறையில் அரிதானது என்று நோபல் கமிட்டி புகழாரம் சூட்டியுள்ளது.

ஆரம்ப காலகட்டத்தில், அறிவியல் ஆராய்ச்சி சமூத்தினரால் டேனியலின் கண்டுபிடிப்பு அங்கீகரிக்கப்படவில்லை. மாறாக, அவரை அனைவரும் ஏளனம் செய்தனர். இதன் உச்சகட்டமாக, ஆராய்ச்சியாளர்கள் குழுவில் இருந்து நீக்கப்பட்டார். எனினும், தனக்கு நேர்ந்த அவமதிப்புகளால் சோர்ந்துவிடவில்லை.

சில காலத்துக்குப் பிறகு தான் டேனியலின் கண்டுபிடிப்பின் மகத்துவத்தை அறிவியல் சமூகமே வியந்து பாராட்டத் தொடங்கியது.

அறிவியல் அறிஞர்களின் போராட்ட வாழ்க்கைக்கு சமகால விஞ்ஞானியான டேனியல் ஷெஸ்ட்மென் ஓர் எடுத்துக்காட்டு என்றால் அது மிகையாகாது.

நோபல் பரிசு கிடைத்துள்ளது குறித்து கேட்டதற்கு, "வியத்தகு உணர்வை அளிக்கிறது," என்று அமைதியாகச் சொல்லியிருக்கிறார் டேனியல்.