Published:Updated:

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மரணம்!

Vikatan Correspondent
ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மரணம்!
ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மரணம்!

சான்ஃபிரான்சிஸ்கோ, அக்.6,2011

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மரணம்!

ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஸ்டீவ் ஜாப்ஸ் மரணமடைந்தார். அவருக்கு வயது 56.

கணினி தொழில்நுட்ப உலகுக்கு பேரதிர்ச்சியைத் தரும் இந்தத் துயரத் தகவலை, ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது.

கடந்த சில ஆண்டுகளாக கணையப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ஸ்டீவ் ஜாப்ஸ், சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.

புற்றுநோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுக் கொண்டே தனது பணியையை வெகுகாலம் தொடர்ந்தவர் என்பது கவனத்துக்குரியது.

ஜனவரி முதல் மருத்துவ விடுமுறையில் இருந்து வந்த அவர், ஆப்பிள் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து ஆகஸ்ட் மாதத்தில் விலகியது குறிப்பிடத்தக்கது.

தனது கல்லூரிப் படிப்பை பாதியிலே விட்ட ஜாப்ஸ், தன்னுடைய பள்ளி நண்பரான ஸ்டீஃபன் வோஸ்னியாக்குடன் இணைந்து 1976-ல் ஆப்பிள் நிறுவனத்தை நிறுவினார். 1980 காலகட்டங்களில் இந்நிறுவனம் தயாரித்த மேக் கணினிகள் (Macintosh Computers) பிரபலம் அடைந்தன. 1985-ல்  தனது தொழில் கூட்டாளிகளுடன் ஏற்பட்ட பிரச்னைகளால் நிறுவனத்திலிருந்து வெளியேறினார்.

மீண்டும் 1997-ல் ஐமேக் (iMac) என்ற புதிய கண்டுப்பிடுப்பு மூலம் அவர் மீண்டும் ஆப்பிள் நிறுவனத்தை புதுப்பித்தார்.
 
கடந்த 2002-ல் ஐபாடு (iPod) என்ற வெளியீட்டின் வாயிலாக தொழில்நுட்பத்துறையில் புதுமையான புரட்சியினை ஏற்படுத்தினார்.

ஐபோன் (iPhone) எனும் புதிய படைப்பைத் தொடர்ந்து, நுண்ணறி பேசி (Smart Phone) சந்தையிலும் ஆப்பிள் நிறுவனம் கால்பதித்தது.

காலப்போக்கில் ஆப்பிள் தன் ஐபோன்களில் பல பதிப்புகளை (Versions) வெளியிட்டு தொழில்நுட்பச் சந்தையில் லாபம் கண்டது மட்டுமின்றி மகத்தான சாதனையும் படைத்தது.

சிலிகான் வேலியில் கால்பதித்து தொழில்நுட்ப செயற்களங்களில் (Technology Arena) புரட்சியை ஏற்படுத்தி வந்த ஸ்டீவ் ஜாப்ஸ்சின் இழப்பு, உலகளாவிய சமகால கணினித் துறையால் ஈடுசெய்ய முடியாதது.

*

பகிர்வுக் களம்

ஸ்டீவ் ஜாப்ஸ் - கணினிப் புரட்சியால் நிலைத்து நிற்கும் இந்தத் தொழில்நுட்ப மேதைக்கு நீங்கள் பகிர விரும்பும் இரங்கல் செய்தி...