Published:Updated:

நிலநடுக்கத்தினால் உருக்குலைந்தது நேபாளம்; 800 பேர் பலி ?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நிலநடுக்கத்தினால் உருக்குலைந்தது நேபாளம்; 800 பேர் பலி ?
நிலநடுக்கத்தினால் உருக்குலைந்தது நேபாளம்; 800 பேர் பலி ?

நிலநடுக்கத்தினால் உருக்குலைந்தது நேபாளம்; 800 பேர் பலி ?

காத்மாண்டு:  நேபாளத்தில் இன்று ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்து மிகப்பெரிய அளவில் பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கி  படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், சுமார் 800 பேர் வரை பலியாகி இருக்கலாம் என ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தினால் உருக்குலைந்தது நேபாளம்; 800 பேர் பலி ?

நேபாளத்தில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 என்ற அளவில் பதிவானதாக தகவல் வெளியானது. அதன்பின்னர், மக்கள் தொகை அதிகம் உள்ள தலைநகர் காட்மாண்டுவை உலுக்கிய நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவாகியிருந்தது தெரியவந்தது. குடியிருப்புகள்  மற்றும் கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அலறியபடி  வெளியேறி சாலைகளில் குழுமினர்.

நிலநடுக்கத்தினால் உருக்குலைந்தது நேபாளம்; 800 பேர் பலி ?

தரகாரா டவர்  இடிந்து விழுந்தன

எங்கு திரும்பினாலும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சைரன் ஒலி எழுப்பியபடி சென்றன. அரசு ஹெலிகாப்டர்கள் வானில் வட்டமடித்தபடி  மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன. காட்மாண்டுவில் இருந்த 19ஆம் நூற்றாண்டு பழமையான 9 மாடிக் கட்டடமான "தரகாரா" டவர் முழுமையாக இடிந்து விழுந்தது. அக்கட்டடத்தில் இருந்த 200 பேர் மண்ணோடு மண்ணாக புதையுண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. ஒருவரின் உடல் மற்றும் கிடைத்துள்ளது.

பீஸ்மன் டவர் என்றும் அழைக்கப்படும் இக்கட்டடம் 61.88 மீட்டர் உயரமானது. காட்மாண்டுவின் சுந்தரா என்னும் மையப்பகுதியில் 1832 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இக்கட்டடம் அதன் கட்டடக் கலைக்காக யுனோஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டதாகும்.

நிலநடுக்கத்தினால் உருக்குலைந்தது நேபாளம்; 800 பேர் பலி ?

காட்மாண்டு விமான நிலையம் மூடல்

இதனிடையே மீண்டும் நில நடுக்கம் ஏற்படலாம் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், காட்மாண்டுவில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

பழைய காட்மாண்டு நகரில் உள்ள ஒரு பகுதியில் குறுகிய சந்தில் உள்ள வீடுகள் ஒன்றின் மேல் ஒன்று விழுந்து நொறுங்கின. உயிரிழப்பு தொடர்பான தகவல் வெளியாகவில்லை. மேலும் பல நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் வீடுகளுக்கு செல்லாமல்  வெளியில் இருக்கும்படி நேபாளத்தின் தேசிய வானொலி எச்சரிக்கை விடுத்துள்ளது.

நிலநடுக்கத்தினால் உருக்குலைந்தது நேபாளம்; 800 பேர் பலி ?

800 பேர் பலி?

இந்நிலையில் மிக மோசமான இந்த நிலநடுக்கத்தினால் சுமார் 700 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்றும், இடிபாடுகளை அகற்றினால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளதாகவும் ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன. தலைநகர் காட்மாண்டுவில் மட்டும் சுமார் 200 பேர் வரை பலியாகி இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தினால் உருக்குலைந்தது நேபாளம்; 800 பேர் பலி ?

இதனிடையே காட்மாண்டு மருத்துவமனையில் ஏராளமான உடல்கள் வைக்கப்பட்டுள்ளதாக மற்றொரு ஏஜென்சி தகவல் தெரிவிக்கிறது. மேலும் நூற்றுக்கணக்கானோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க, உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களை தேடி, அவர்களது உறவினர்கள்  மருத்துவமனைகளில் தேடி அலைவது நெஞ்சை உருக்குவதாக உள்ளது என அந்நாட்டு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

மீட்பு பணிகள் தீவிரம்; அவசர நிலை பிரகடனம்

இந்நிலையில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எங்கு பார்த்தாலும் கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாக காட்சியளிக்கும் நிலையில், மிகப்பெரிய அளவில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நிலநடுக்கத்தினால் உருக்குலைந்தது நேபாளம்; 800 பேர் பலி ?

முதலில் இடிபாடுகளுக்குள் உயிருடன் சிக்கி உள்ளவர்களை காப்பாற்றுவதில் மீட்புக்குழுவினர் முன்னுரிமை அளித்து மீட்டு வருகின்றனர். அதே சமயம் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டு வருகின்றன.

நிலநடுக்கத்தினால் உருக்குலைந்தது நேபாளம்; 800 பேர் பலி ?

நேபாள பிரதமருடன் மோடி பேச்சு

நிலநடுக்கத்தினால் நேபாளம் மிக மோசமாக உருக்குலைந்துள்ள நிலையில், நேபாள பிரதமர் ராம் பரன் யாதவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி, நிலைமையை கேட்டறிந்தார்.

இந்திய விமானப்படை விமானங்கள் நேபாளம் விரைவு

அதனைத் தொடர்ந்து இந்திய அரசு அனுப்பி வைத்த தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 2 விமானங்கள் நிவாரண பொருட்களுடன் தலைநகர் காத்மாண்டுவில் தரை இறங்கி உள்ளது.

நிலநடுக்கத்தினால் உருக்குலைந்தது நேபாளம்; 800 பேர் பலி ?

இதுதவிர மேலும் 3 விமானங்களும் நிவாரண பொருட்களுடன் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை செயலர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கத்தினால் உருக்குலைந்தது நேபாளம்; 800 பேர் பலி ?

இந்திய தூதரக ஊழியர் மகள் பலி

இந்நிலையில் நிலநடுக்கம் காரணமாக தலைநகர் காட்மாண்டுவில் இந்திய தூதரக வளாகத்தில் உள்ள ஒரு வீடு இடிந்து விழுந்ததில் இந்திய தூதரக ஊழியர் ஒருவரின் மகள் உயிரிழந்துவிட்டதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு