Published:Updated:

இலங்கை தமிழர் உள்பட 10 பேரின் தூக்கை நிறுத்த பான் கி மூன் வேண்டுகோள்!

Vikatan Correspondent
இலங்கை தமிழர் உள்பட 10 பேரின் தூக்கை நிறுத்த  பான் கி மூன் வேண்டுகோள்!
இலங்கை தமிழர் உள்பட 10 பேரின் தூக்கை நிறுத்த பான் கி மூன் வேண்டுகோள்!
இலங்கை தமிழர் உள்பட 10 பேரின் தூக்கை நிறுத்த  பான் கி மூன் வேண்டுகோள்!

நியூயார்க்: இலங்கை தமிழர் உள்ளிட்ட 10 பேரின் மரண தண்டனையை நிறுத்தி வைக்க இந்தோனேசியாவுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தியதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மயூரன் சுகுமாரன் (33) என்ற இலங்கை தமிழர் மற்றொரு ஆஸ்திரேலியர், நைஜீரியா, பிரேசில், கானா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 10 பேருக்கு மரண தண்டனை விதித்து பாலி நகர நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 2 பேரை மீட்க ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்தன. அதேபோல், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய மற்றவர்களின் மனுக்களும் அந்நாட்டு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதனையடுத்து, 10 பேரும் கடந்த மாதம் 4 ஆம் தேதி பாதுகாப்பு மிகுந்த நுசகம்பன்கன் சிறைக்கு மாற்றப்பட்டனர். அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான அனைத்து இறுதிகட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டு நாளை (செவ்வாய்க்கிழமை) மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. அதனால், மரண தண்டனை கைதிகளிடம் பேசி ஆறுதல் கூற மத குருமார்கள், துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனையை நிறைவேற்றும் தொழிலாளிகள், சுட்டுக்கொன்ற பின்பு கைதிகளின் மரணத்தை உறுதிப்படுத்த மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், 10 பேரின் மரண தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவை கேட்டுக்கொண்டு உள்ளார். இது தொடர்பாக பான் கி மூனின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''உலக நாடுகளில் பெரும்பாலானவை மரண தண்டனையை ஒழிக்க நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், மரண தண்டனையை நிறைவேற்ற நீங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளை அவசரமாக பரிசீலனை செய்து தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டுகிறேன். எத்தகைய சூழ்நிலையிலும் மரண தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று ஐ.நா. சபை எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

சர்வதேச சட்டவிதிகளின்படி மிகக்கொடூரமான குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு மட்டுமே அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்கப்படுகிறது. குறிப்பாக சர்வதேச அளவில் கொலை குற்றங்களில் ஈடுபடுவோருக்கு இந்த தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால், போதைப்பொருள் கடத்துதல் போன்றவற்றை இதுபோன்ற கொடூரமான குற்றச்செயலாக கருத முடியாது. அதனால், 10 பேருக்கும் மரணதண்டனை நிறைவேற்ற உங்களுடைய அரசு எடுத்து வரும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும்" என்று கூறப்பட்டு உள்ளது.