Published:Updated:

நேபாள பூகம்பத்தில் பாதிக்கப்பட்டோர் பற்றி அறிய உதவும் கூகுள் சேவை!

Vikatan Correspondent
நேபாள பூகம்பத்தில் பாதிக்கப்பட்டோர் பற்றி அறிய உதவும் கூகுள் சேவை!
நேபாள பூகம்பத்தில் பாதிக்கப்பட்டோர் பற்றி அறிய உதவும் கூகுள் சேவை!

நேபாளத்தை உலுக்கிய பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி தகவல் அறியவும், உயிர் பிழைத்தவர்கள் பற்றி தகவல் தெரிவிக்கவும் உதவும் வகையில் கூகுள் நிறுவனம் பர்சன் பைண்டர் இணைய சேவையை துவக்கியுள்ளது.

நேபாள பூகம்பத்தில் பாதிக்கப்பட்டோர் பற்றி அறிய உதவும் கூகுள் சேவை!

பூகம்பம், சூறாவளி போன்ற இயற்கை பேரிடர் பாதிப்புகளின் போது தகவல் தொடர்பும் பாதிக்கப்படுவதால் இவற்றில் சிக்கியவர்களின் நிலை பற்றி உடனடியாக தகவல் பெறுவது பெரும் சிக்கலுக்கு உள்ளாகிறது. ஃபேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடக சேவைகள் கை கொடுத்தாலும் கூட, பேரிடர் பகுதிகளில் வசித்தவர்கள் நிலை என்ன என்பதை அவரது உறவினர்களும் அன்புக்கிறியவர்களும் உடனடியாக தெரிந்துகொள்வது கடினமான செயலாகவே இருக்கிறது. அதேபோல், பேரிடரில் இருந்து மீண்டவர்கள் தாங்கள் நலமாக இருக்கும் தகவலை அன்புக்குறியவர்களிடம் பகிர்ந்துகொள்வது சிக்கலானதாகவே இருக்கிறது.

இது போன்ற சூழலில், எளிதாக கை கொடுக்கும் தொழில்நுட்பமாக பியூபில் பர்சரன் இணைய சேவையை கூகுள் உருவாக்கி உள்ளது. அடிப்படையில் எளிமையான இணையதளமான இந்த சேவையில் இரண்டு பகுதிகள் இருக்கும். ஒன்று உயிர்பிழைத்தவர்கள் மற்றும் நலமுடன் இருப்பவர்கள் பற்றிய விவரங்களை தெரிவிப்பதற்கான பகுதி. பேரிடர் பகுதிகளில் தகவல் ஒருங்கிணைப்பு பெரும் சோதனைக்கு உள்ளாகும் ஆரம்ப கட்டத்தில் மீட்கப்பட்டவர்கள் பற்றிய விவரங்களை அறிந்தவர்கள் இந்த பகுதியில் அவற்றை வெளியிடலாம்.

இரண்டாவது பகுதி, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அவர்கள் தொடர்பான விவரங்களை தேடுவதற்கானது. இந்த பகுதியில் உறவினர்கள் பெயர் உள்ளிட்ட தகவல்களை தெரிவித்து அவர்களில் நிலை பற்றிய விவரங்களை கோரலாம். இதைப் பார்த்து விவரமறிந்தவர்கள் தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து அறிவதற்கான மற்றும் உயிர் பிழைத்தவர்கள் குறித்த விவரங்களை பகிர்ந்துகொள்வதற்கான தகவல் மேடையாக இந்த தளம் செயல்படுகிறது. இந்த இணைய சேவையை கூகுள் நேபாள பூகம்பத்திற்காக புதுப்பித்துள்ளது. ஏற்கனவே உத்ராகாண்ட் மேக்வெடிப்பு பாதிப்பு மற்றும் பாலின் புயல் பாதிப்பு போன்ற பேரிடர்களின்போது கூகுள் இந்த பர்சன் பைண்டர் சேவையை அமைத்தது. தற்போது நேபாள மக்களுக்கு உதவுவதற்காக இந்த சேவையை அமைத்துள்ளது.

இணையதள முகவரி: <https://google.org/personfinder/2015-nepal-earthquake/>

- சைபர்சிம்மன்