Published:Updated:

நேபாளத்தை குலைத்துப் போட்ட பூகம்பம்: தரைமட்டமான கட்டடங்கள் தோண்ட, தோண்ட உடல்கள்!

Vikatan Correspondent
நேபாளத்தை குலைத்துப் போட்ட பூகம்பம்: தரைமட்டமான கட்டடங்கள் தோண்ட, தோண்ட உடல்கள்!
நேபாளத்தை குலைத்துப் போட்ட பூகம்பம்: தரைமட்டமான கட்டடங்கள் தோண்ட, தோண்ட உடல்கள்!

காட்மாண்டு: இந்தியாவையொட்டி இமயமலை பகுதியில் அமைந்துள்ள இயற்கை எழில் மிகுந்த தேசமான நேபாளத்தை நேற்று முன்தினம் கடுமையான பூகம்பம் தாக்கியதில் நேபாளம் சிதைந்து கிடக்கிறது.

நேபாளத்தை குலைத்துப் போட்ட பூகம்பம்: தரைமட்டமான கட்டடங்கள் தோண்ட, தோண்ட உடல்கள்!

நேபாள தலைநகர் காட்மாண்டுவில் இருந்து வடமேற்கே 80 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள லாம்ஜங் என்ற இடத்தை மையமாகக் கொண்டு, 7.9 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த பூகம்பம் நேபாளத்தையே உலுக்கிவிட்டது.

பூகம்பத்தினால் காட்மாண்டு, போக்ரா, கீர்த்திநகர் உள்ளிட்ட பல நகரங்களில் ஏராளமான கட்டடங்கள், வீடுகள் இடிந்து முற்றிலும் நாசமாயின. பல சரித்திரப் புகழ் பெற்ற  கோவில்களும் இடிந்து விழுந்தன. பல இடங்களில் சாலைகள் இரண்டாகப்  பிளந்து போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப் பட்டன. தகவல் தொடர்பு சேவையும்  துண்டிக்கப்பட்டது.  2 கோடியே 80 லட்சம் மக்கள் வாழும் நேபாளத்தில் கடந்த 81 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய தேசிய அழிவாக இது கருதப்படுகிறது.

நேபாளத்தை குலைத்துப் போட்ட பூகம்பம்: தரைமட்டமான கட்டடங்கள் தோண்ட, தோண்ட உடல்கள்!

கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் ஏராளமான மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக பலி ஆனார்கள். மேலும் ஏராளமான பேர் படுகாயம் அடைந்தனர். பெரிய அளவில் ஏற்பட்ட பூகம்பத்தைத்  தொடர்ந்து அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டதால் பாதி இடிந்த நிலையில் இருந்த கட்டடங்களும் சரிந்து விழுந்தன. காட்மாண்டுவின் அடையாள சின்னமாக விளங்கிய தாரஹரா கோபுரம் இடிந்து தரை மட்டமானது.

மீட்புக்குழுவினர் ஆங்காங்கே சென்று   இடிபாடுகளை அகற்றி காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைகளுக்காக அனுப்பிவைத்தனர். பலியானவர்களின் உடல்களையும் மீட்டனர். மீட்புப்பணிக்காக இந்தியாவில் இருந்து மீட்புக்குழுவினரும், மருத்துவ குழுவினரும் மற்றும் வல்லுனர்களும் அனுப்பிவைக்கப்பட்டனர். மோப்ப நாய்களும் அனுப்பிவைக்கப்பட்டன. இந்திய விமானப்படையைச் சேர்ந்த விமானங்கள், ஹெலிகாப்டர்களையும் இந்திய அரசு அனுப்பிவைத்தது.

நேபாளத்தை குலைத்துப் போட்ட பூகம்பம்: தரைமட்டமான கட்டடங்கள் தோண்ட, தோண்ட உடல்கள்!

மேலும் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சரக்கு விமானங்களில் உணவுப்பொருட்கள், கூடாரங்கள் உள்ளிட்ட 43 டன் நிவாரண பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

2ஆவது நாளாக நேற்று மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. மீட்புப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது நேற்று மதியம் 12.42 மணிக்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். என்றாலும் இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்படவில்லை. தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்றன. நேற்று மேலும் ஏராளமான உடல்கள் மீட்கப்பட்டன. இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களும் மீட்கப்பட்டனர்.

பலி 3000 ஐ தாண்டியது

இந்நிலையில் பூகம்ப சாவு எண்ணிக்கை 3,000 த்தை தாண்டியுள்ளது. இதேபோல் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 6,500 ஆக அதிகரித்து உள்ளது.

மீட்புப்பணியில் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளும் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீட்டதும் கூடி நின்றவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். மீட்கப்பட்டவர்களுக்கு திறந்தவெளியில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் அவர்கள் மருத்துவமனைகளுக்குக்   கொண்டு செல்லப்பட்டனர்.

காட்மாண்டு, பக்தர்பூர், லலித்பூர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பூகம்ப சேதம் அதிகமாக உள்ளது. தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திறந்த வெளியில்...

நட்சத்திர ஹோட்டல்களில் தங்கி இருந்த சுற்றுலா பயணிகள், மீண்டும் பூகம்பம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் தங்கள் அறைகளுக்கு திரும்பாமல் திறந்த வெளியிலேயே தங்கி உள்ளனர். இதேபோல் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போரும், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் திறந்த வெளியிலேயே தங்கினர்.

நேபாளத்தை குலைத்துப் போட்ட பூகம்பம்: தரைமட்டமான கட்டடங்கள் தோண்ட, தோண்ட உடல்கள்!

மின்சாரம், குடிநீர் சப்ளை பாதிப்பு

பூகம்பத்தின் காரணமாக பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து விட்டன. இதனால் மின்சாரம் இன்றி மக்கள் தவிக்கிறார்கள். இந்த நிலை மாற இன்னும் சில நாட்கள் ஆகும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மின்சாரம் இல்லாததால் குடிநீர் சப்ளையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதால் மக்கள் பொருட்கள் வாங்க முடியாமல் தவிக்கிறார்கள்.

பூகம்பத்தினால் 26 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள மாவட்டங்களில் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என்றும் அவர் கூறினார். கூர்க்கா பகுதியில்தான் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

நேற்று மீண்டும் பூகம்பம் ஏற்பட்ட போது திரிசூலி நீர் மின்திட்ட குகைப்பாதை இடிந்து விழுந்தது. இதில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த 60 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்கள் கதி என்ன ஆனது? என்று உடனடியாகத்  தெரியவில்லை.

அவசரநிலை பிரகடனம்

மீட்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுள்ள நேபாள அரசு, அந்த பணிகளை முடுக்கிவிடும் வகையில் நேபாளத்தில் அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை விடப்பட்டு உள்ளது.

இந்தியர்கள் மீட்பு

நேபாளத்தில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் மீட்கப்பட்டு இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் அங்கிருந்து டெல்லி அழைத்து வரப்படுகிறார்கள். நேற்று ஒரு விமானத்தில் 225 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் அழைத்து வரப்பட்டு உள்ளனர்.

நிவாரண பணிகளுக்கு மீட்புக்குழுவினர், கனரக வாகனங்கள், மருந்து பொருட்களை அனுப்பிவைத்து உதவுமாறு பல்வேறு நாடுகளை நேபாளம் கேட்டுக்கொண்டு இருக்கிறது. ஆனால் பூகம்பம் ஏற்பட்டது பற்றிய தகவல் கிடைத்த உடனேயே இந்தியா, நேபாளத்துக்கு உதவிக்கரம் நீட்டியது. இந்தியாவில் இருந்து சென்ற மீட்புக்குழுவினர் அங்கு மும்முரமாக மீட்புப்பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

உலக நாடுகளும் உதவி

அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள்,பாகிஸ்தான்,சீனா  உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் பேரிடர் மீட்புக்குழுவினரை அனுப்பிவைக்க முன்வந்துள்ளன. மீட்புப்பணிக்காக தாய்லாந்து ராணுவ வீரர்களையும், மருத்துவ குழுவினரையும் அனுப்பிவைத்து இருக்கிறது. 

இதனையடுத்து மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன