Published:Updated:

மீட்பு பணிகளை ஒருங்கிணைக்கும் இந்திய உயர்மட்ட குழு நேபாளம் பயணம்!

Vikatan Correspondent
மீட்பு பணிகளை ஒருங்கிணைக்கும்  இந்திய உயர்மட்ட குழு நேபாளம் பயணம்!
மீட்பு பணிகளை ஒருங்கிணைக்கும் இந்திய உயர்மட்ட குழு நேபாளம் பயணம்!

புதுடெல்லி: நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிப்படைந்துள்ள நேபாளத்தில் நடைபெறும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை ஒருங்கிணைக்க, மூத்த அதிகாரிகள் அடங்கிய இந்திய உயர்மட்ட குழு நேபாளம் சென்றுள்ளது.

நேபாளம் நாட்டில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில்,  3218 பேருக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். மேலும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இன்று காலை பல பகுதிகளில் மீண்டும் நில அதிர்வும் ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக அந்நாட்டு மக்கள் அனைவரும் வெட்டவெளியில் கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர். இரவு நேரங்களில் மக்கள் தூக்கமின்றி தொடர் பிரார்த்தனையிலும்  ஈடுபட்டு வருகின்றனர்.

நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் இந்தியா முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் 13 விமானங்கள், 3 பயணிகள் விமானம், ஆறு மி-17 ரக ஹெலிகாப்டர்கள், மேம்படுத்தப்பட்ட இரண்டு லைட் ஹெலிகாப்டர்கள் ஆகியவை மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. ராணுவத் துறை மருத்துவ மனைகள் மற்றும் பொறியியல் குழு மற்றும் மருத்துவர்கள் அடங்கிய குழுக்களும் இந்தியாவால் அனுப்பப்பட்டுள்ளன.

மீட்பு பணிகளை ஒருங்கிணைக்கும்  இந்திய உயர்மட்ட குழு நேபாளம் பயணம்!

இந்த நிலையில், உள்துறை, பாதுகாப்பு, வெளியுறவுத் துறை, தேசிய பேரிடம் மேலாண்மை அமைப்பின் மூத்த அதிகாரிகள் அடங்கிய குழு, மீட்பு, நிவாராண பணிகளை ஒருங்கிணைக்க நேபாளம் சென்றுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் பிகே பிரசாத் தலைமையில் சென்றுள்ள இந்த குழு, நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்கள் குறித்தும் கண்கானிக்க உள்ளது. நேபாள அரசுடன் இணைந்து இந்த குழு சேதத்தை மதிப்பீட்டு இந்திய அரசுக்கு அனுப்பும் என்று தகவல்கள் கூறுகின்றன.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நேற்றய கூட்டத்தின் முடிவில், நேபாளத்திற்கு உயர்மட்ட குழு அனுப்பும் முடிவு எடுக்கப்பட்டது.