Published:Updated:

2002: புற்றுநோயால் கால் இழப்பு; 2022: 104 நாள்கள் மாரத்தான் ஓட்டம்; சாதித்த 46 வயது பெண்!

Jacky Hunt-Broersma ( Twitter Image: /@NCrunnerjacky )

2002-ம் ஆண்டில் இவருக்கு எலும்பு மற்றும் எலும்பை சுற்றி உள்ள மென்மையான திசுக்களை பாதிக்கும் அரிய வகை புற்று நோயால் (Ewing's sarcoma) பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

2002: புற்றுநோயால் கால் இழப்பு; 2022: 104 நாள்கள் மாரத்தான் ஓட்டம்; சாதித்த 46 வயது பெண்!

2002-ம் ஆண்டில் இவருக்கு எலும்பு மற்றும் எலும்பை சுற்றி உள்ள மென்மையான திசுக்களை பாதிக்கும் அரிய வகை புற்று நோயால் (Ewing's sarcoma) பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

Published:Updated:
Jacky Hunt-Broersma ( Twitter Image: /@NCrunnerjacky )

புற்றுநோயால் தனது இடது காலை இழந்த பெண் ஒருவர் தொடர்ச்சியாக மாரத்தான் ஓடி கின்னஸ் சாதனைக்கு முயன்றுள்ளார். 

46 வயதான ஜாக்கி ஹண்ட் புரோயர்ஸ்மா, தென்னாபிரிக்காவில் பிறந்து இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்தில் வாழ்ந்து வந்தவர். 2002-ம் ஆண்டில் இவருக்கு எலும்பு மற்றும் எலும்பைச் சுற்றியுள்ள மென்மையான திசுக்களை பாதிக்கும் அரிய வகை புற்றுநோயால் (Ewing's sarcoma) பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

ஜாக்கி ஹண்ட் புரோயர்ஸ்மாவின் கால்கள்
ஜாக்கி ஹண்ட் புரோயர்ஸ்மாவின் கால்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இரண்டு வாரங்கள் கழித்து இவரின் உயிரை காக்க மருத்துவர்கள் உடனே இடது காலை அகற்றினர். அப்போது 26 வயதான ஜாக்கி, தன் வாழ்வின் இருண்ட பக்கங்களைக் கடந்து கொண்டிருந்தார். வாழ்வின் விளையாட்டுகளையும், தன் உடல்மீது திணிக்கப்பட்ட மாற்றங்களையும் புரிந்து கொள்ளவே அவருக்கு முதல் இரண்டு வருடங்கள் தேவைப்பட்டன. 

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வாழ்வின் மீது அவருக்கு கோபமும், வெறுப்பும் இருந்த நேரம் அது. பொது இடங்களில் தன்னுடைய இடது காலில் பொருத்தப்பட்ட செயற்கை கருவியை மறைக்க நீண்ட கால் சட்டை அணிந்து கொண்டு செல்வார். ஓடுவதில் ஆர்வம் கொண்ட ஜாக்கி, 2016-ல் ஓடத் தொடங்கினார்.

Jacky Hunt-Broersma
Jacky Hunt-Broersma
Twitter Image: /@NCrunnerjacky

அவருக்கு, அவரின் கணவர் தொடர்ந்து ஊக்கமளித்தார். இந்நிலையில், ஜனவரியின் பாதியிலிருந்து ஒவ்வொரு நாளும் ஐந்து மணி நேரம் என 26.2 மைல் ஓடி,  சனிக்கிழமையன்று தனது 104 ஆவது தொடர் மாரத்தானை 104 நாள்களில் ஓடி நிறைவு செய்துள்ளார். இது உலக சாதனையாக கின்னஸில் இடம்பெறும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism