Published:Updated:

தென் கொரியா சென்றார் பிரதமர் மோடி!

Vikatan Correspondent
தென் கொரியா சென்றார் பிரதமர் மோடி!
தென் கொரியா சென்றார் பிரதமர் மோடி!
தென் கொரியா சென்றார் பிரதமர் மோடி!

சியோல்:  இந்திய பிரதமர் நரேந்திர மோடியின்  மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தின் அடுத்த கட்டமாக,  அவர் இன்று காலை தென்கொரியா சென்றடைந்தார். சியோல் விமான நிலையத்தில் தென் கொரிய வெளியுறவுத் துறை துணை அமைச்சர் உள்ளிட்டோர் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

கடந்த 14 ஆம் தேதி முதல் மூன்று நாடுகள் சுற்றுப்பயணம்  மேற்கொண்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. முதலில் சீனா சென்ற மோடி, பின்னர் அங்கிருந்து மங்கோலியா சென்றார். அதனைத் தொடர்ந்து மங்கோலியாவில் இருந்து புறப்பட்ட மோடி, இன்று காலை தென்கொரியா சென்றடைந்தார்.

சியோலில் உள்ள தேசிய நினைவிடம் மற்றும் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்வளையம் வைத்தும், மலர்கள்  தூவியும் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து தென்கொரிய அதிபரையும் மோடி சந்திக்க்கிறார்.

முன்னதாக தென் கொரியாவில் உள்ள இந்திய சமூகத்தினர் ஏற்பாடு செய்துள்ள ஒரு வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் 1,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது. பின்னர் இரு நாட்டுக்கிடையில் பல்வேறு வணிக ரீதியிலான ஒப்பந்தங்களும், அரசியல் ரீதியிலான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் கூறுகின்றன.