Published:Updated:

பாகிஸ்தானில் பயங்கரம்: பஸ் பயணிகள் 19 பேர் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானில் பயங்கரம்: பஸ் பயணிகள் 19 பேர் சுட்டுக்கொலை!
பாகிஸ்தானில் பயங்கரம்: பஸ் பயணிகள் 19 பேர் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானில் பயங்கரம்: பஸ் பயணிகள் 19 பேர் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானில் பயங்கரம்: பஸ் பயணிகள் 19 பேர் சுட்டுக்கொலை!

குவேட்டா: பாகிஸ்தானில் பஸ்சில் சென்று கொண்டிருந்த 19 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் குவேட்டா நகரில் இருந்து கராச்சிக்கு நேற்று நள்ளிரவு சென்ற 2 பஸ்களை, மஸ்தாங் என்ற இடத்தில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் மடக்கினர். பாகிஸ்தான் ராணுவ உடையில் வந்த அவர்கள், திடீரென பஸ்சில் புகுந்து பயணிகளை சரமாரியாகச் சுட்டனர். இதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட பயணிகளின் உடல்களை அங்குள்ள மலைப்பகுதியில் வீசிவிட்டு தீவிரவாதிகள் தப்பிவிட்டனர். தகவலறிந்து வந்த பாதுகாப்புப்  படையினர் அங்கு விரைந்து சென்று உடல்களை மீட்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

கொடூரமான இந்தத் துப்பாக்கிச் சூடு  பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்த கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மகாணத்தைச்  சேர்ந்த கிளர்ச்சியாளர்கள், தனிநாடு கேட்டு நீண்டகாலமாகப்  போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த இருவாரங்களுக்கு முன்பு கராச்சி நகரில் சென்று கொண்டிருந்த பஸ்சை நடுவழியில் நிறுத்தி,  அதில் பயணம் செய்த 43 பேரை ஐஎஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். அதேபோல் இந்த சம்பவம் நடந்துள்ளதால், ஐஸ் தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும்  விசாரணை நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளும் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். தீவிரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. இதனால் அப்பாவி பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதி நிலவுகிறது.

அடுத்த கட்டுரைக்கு