Published:Updated:

கொலம்பியா: புரட்சிப் படைத் தலைவர் அல்ஃபோன்சோ கொல்லப்பட்டார்!

விகடன் விமர்சனக்குழு
கொலம்பியா: புரட்சிப் படைத் தலைவர் அல்ஃபோன்சோ கொல்லப்பட்டார்!
கொலம்பியா: புரட்சிப் படைத் தலைவர் அல்ஃபோன்சோ கொல்லப்பட்டார்!

நவ.5,2011

கொலம்பியா: புரட்சிப் படைத் தலைவர் அல்ஃபோன்சோ கொல்லப்பட்டார்!

கொலம்பியாவின் இடதுசாரி ஃபார்ஸ் (Farc) கொரில்லா குழு எனப்படும் புரட்சிப் படையின் தலைவர் அல்ஃபோன்சோ கானோ கொல்லப்பட்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் இன்று அறிவித்தது.

தென் கிழக்கு பகுதியில் உள்ள வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கையில் அவர் கொல்லப்பட்டதாக கொலம்பிய பாதுகாப்பு அமைச்சர் ஜூவான் கார்லோஸ் பின்ஸன் தெரிவித்தார்.

கொலம்பியாவின் புரட்சிகர ஆயுதப் படையான ஃபார்ஸின் போராளிகள் கொல்லப்பட்டதாகவும், பலரை ராணுவம் கைது செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
அல்ஃபோன்சோ பற்றி தகவல் அளிப்போருக்கு 4 மில்லியன் டாலர் அளவில் பரிசுத் தொகை வழங்கப்படும் என கொலம்பியா அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.