Published:Updated:

பின்லேடன் கொல்லப்பட்டது அமெரிக்கா-பாகிஸ்தானின் நாடகம் என்கிறார் ஜேன் கார்பின்!

பின்லேடன் கொல்லப்பட்டது அமெரிக்கா-பாகிஸ்தானின் நாடகம் என்கிறார் ஜேன் கார்பின்!
பின்லேடன் கொல்லப்பட்டது அமெரிக்கா-பாகிஸ்தானின் நாடகம் என்கிறார் ஜேன் கார்பின்!

பின்லேடன் கொல்லப்பட்டது அமெரிக்கா-பாகிஸ்தானின் நாடகம் என்கிறார் ஜேன் கார்பின்!

பின்லேடன் கொல்லப்பட்டது அமெரிக்கா-பாகிஸ்தானின் நாடகம் என்கிறார் ஜேன் கார்பின்!

லண்டன்: ஒசாமா பின்லேடனை அமெரிக்க அதிரடிப்படை வீரர்கள் கொன்றது, இரு நாடுகளும் சேர்ந்து நடத்திய நாடகம் என்று பிரிட்டன் செய்தியாளரும், ஆவணப் படத் தயாரிப்பாளருமான ஜேன் கார்பின் கூறியுள்ளார்.

நியூயார்க் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குக் காரணமான அல்-காய்தா அமைப்பின் தலைவர் பின்லேடனை அமெரிக்கா பல ஆண்டுகளாகத் தேடி வந்தது. இந்நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டு பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து, அந்த நாட்டின் அப்போட்டாபாத் நகரில் பதுங்கி இருந்த பின்லேடனை அமெரிக்க சிறப்பு அதிரடிப்படையினர் சுட்டுக் கொன்றனர். அவர் தப்பிவிடக் கூடாது என்பதற்காக, இந்த நடவடிக்கை குறித்து பாகிஸ்தானிடம் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, ஐ.எஸ்.ஐ. முன்னாள் அதிகாரி ஒருவர்தான் பின்லேடனின் இருப்பிடம் குறித்து அமெரிக்காவுக்கு தகவல் அளித்ததாகவும், பாகிஸ்தானின் அனுமதியின் பேரிலேயே பின்லேடனை அமெரிக்க வீரர்கள் சுட்டுக் கொன்றதாகவும் அமெரிக்கப் புலனாய்வுச் செய்தியாளர் ஸீமோர் எம்.ஹெர்ஷ் கடந்த மாதம் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு அமெரிக்க அரசு மறுப்பு தெரிவித்தது.

இந்நிலையில், அல்-காய்த குறித்தும், பின்லேடன் குறித்தும் கடந்த 20 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு வரும் பிரிட்டன் செய்தியாளரும், ஆவணப் படத் தயாரிப்பாளருமான ஜேன் கார்பின், அப்போட்டாபாத் இல்லத்தில் பின்லேடனை ஆறு ஆண்டுகளாக சிறை வைத்திருந்தது பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்புதான். அதன் பிறகு அவரை அமெரிக்காவிடம் ஒப்படைத்துவிட்டு, அதிரடி நடவடிக்கையில் அவர் கொல்லப்பட்டதைப் போல இரு நாடுகளும் உலகை நம்பச் செய்தன.

இப்படி இரு நாடுகளும் நாடகமாடியதற்கு, பாகிஸ்தான் ராணுவத்திலும், ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பிலும் உள்ள ஒரு பிரிவினர் பின் லேடனுக்கு ஆதரவு அளித்து வந்தது ஒரு காரணமாக இருக்கலாம். அதிகாரிகளின் ஆசி இல்லாமல், பாகிஸ்தானின் சக்தி வாய்ந்த ராணுவக் கல்லூரிக்கு அவ்வளவு நெருக்கத்தில் பின்லேடனால் வசித்திருக்க முடியாது" என்று கூறியதாக பி.பி.சி. மேற்கோள் காட்டி தெரிவித்து உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு