Published:Updated:

உளவாளிகளை கொன்று பாலத்தில் தொங்கவிட்ட அல்-கொய்தா!

உளவாளிகளை கொன்று பாலத்தில் தொங்கவிட்ட அல்-கொய்தா!
உளவாளிகளை கொன்று பாலத்தில் தொங்கவிட்ட அல்-கொய்தா!

உளவாளிகளை கொன்று பாலத்தில் தொங்கவிட்ட அல்-கொய்தா!

சனா: தங்களின் முக்கிய தலைவரான நாசர் அல்-உஹைஷியை கொல்ல உதவிய 2 உளவாளிகளை சுட்டுக் கொன்றுவிட்டதாக அல்-கொய்தா தெரிவித்துள்ளது.

உளவாளிகளை கொன்று பாலத்தில் தொங்கவிட்ட அல்-கொய்தா!

அமெரிக்க ஆளில்லா விமானம், ஏமன் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் அல்-கொய்தா இயக்கத்தின் அரேபிய தீபகற்ப தலைவரான நாசர் அல்-உஹைஷி பலியானார்.

உளவாளிகளை கொன்று பாலத்தில் தொங்கவிட்ட அல்-கொய்தா!

இதனை அல்-கொய்தா இயக்கம் உறுதிப்படுத்தியுள்ளது. இவர், அல்-கொய்தா இயக்கத்தின் இரண்டாம் நிலை தலைவராக விளங்கினாலும், ஒசாமா பின்லேடனின் தனிச்செயலாளராகவும் பணியாற்றி உள்ளார்.

உளவாளிகளை கொன்று பாலத்தில் தொங்கவிட்ட அல்-கொய்தா!

இந்நிலையில், நாசர் அல்-உஹைஷியை கொல்ல உதவிய 2 உளவாளிகளை அல்-கொய்தா சுட்டுக் கொன்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக, அல்-கொய்தா ஆதரவாளர் ஒருவர், தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள படத்தில், இரண்டு பேர் கண்கள் கட்டப்பட்ட நிலையில் உள்ளனர். மற்றொரு படத்தில் அவர்களில் ஒருவர், உடையில் ரத்தம் வழிய ஒரு பாலத்தில் தொங்கவிடப்பட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு