Published:Updated:

விண்வெளிக்குப் புறப்பட்ட ராக்கெட் சில நொடிகளிலேயே வெடித்து சிதறியது! (வீடியோ)

ஃப்ளோரிடா: விண்வெளிக்குப் புறப்பட்டு சென்றட சில நொடிகளிலேயே ராக்கெட் வெடித்துச் சிதறியது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விண்வெளிக்குப் புறப்பட்ட ராக்கெட் சில நொடிகளிலேயே வெடித்து சிதறியது! (வீடியோ)

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தின் கேப் கெனாவரல் ராக்கெட் ஏவுதளத்திலிருந்து விண்ணில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஏவப்பட்ட அமெரிக்க தனியார் ராக்கெட் 'ஸ்பேஸ் எக்ஸ்' செலுத்தப்பட்ட 2.19 வினாடிகளிலேயே நடுவானில் வெடித்துச் சிதறியதால் விஞ்ஞானிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விண்வெளிக்குப் புறப்பட்ட ராக்கெட் சில நொடிகளிலேயே வெடித்து சிதறியது! (வீடியோ)

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான பால்கான் 9 ராக்கெட், நேற்று மதியம் ஏவப்படுவது அந்நிறுவனத்தின் வலைதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தது. கவுண்ட் டவுண் முடிந்ததும் ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது.

ஆனால், எதிர்பாராத விதமாக அந்த ராக்கெட்டின் முதல் பகுதி பிரிவதற்கு முன்பாகவே அது, புறப்பட்ட 2.19 வினாடிகளிலேயே நடுவானில் வெடித்துச் சிதறியது. இது தொடர்பாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, ''ராக்கெட்டுடனான வீடியோ தொடர்பு முழுவதுமாக செயலிழந்துவிட்டதாக தெரிவித்தார்.

விண்வெளிக்குப் புறப்பட்ட ராக்கெட் சில நொடிகளிலேயே வெடித்து சிதறியது! (வீடியோ)

ராக்கெட் வெடித்து சிதறியதால், அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான, 'நாசா' அதிர்ச்சி அடைந்துள்ளது. சிதறிய அந்த ராக்கெட்டில், 1,800 கிலோ பொருட்களும், கருவிகளும் இருந்துள்ளன; மனிதர்கள் யாரும் அந்த ராக்கெட்டில் செல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. ஆனாலும், இந்த விபத்து குறித்து, முழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு