Published:Updated:

துருக்கியில் ஓரினச் சேர்க்கையாளர்கள் பேரணி: போலீசார் தாக்குதல்!

துருக்கியில் ஓரினச் சேர்க்கையாளர்கள் பேரணி: போலீசார் தாக்குதல்!
துருக்கியில் ஓரினச் சேர்க்கையாளர்கள் பேரணி: போலீசார் தாக்குதல்!

துருக்கியில் ஓரினச் சேர்க்கையாளர்கள் பேரணி: போலீசார் தாக்குதல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இஸ்தான்புல்: துருக்கியில் ஆயிரக்கணக்கான ஆண் பெண் ஓரினச்சேர்க்கையாளர்கள்  பெருமிதப் பேரணி என்ற பெயரில் பேரணி நடத்தினர். அப்போது அவர்களைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளையும், ரப்பர் குண்டுகளையும் வீசித் தாக்குதல் நடத்தியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

துருக்கியில் ஓரினச் சேர்க்கையாளர்கள் பேரணி: போலீசார் தாக்குதல்!

துருக்கியின் ஸ்டிக்லால் தெரு, இஸ்தான்புல்லின் மிகப் பெரிய வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் அங்கீகரிப்பதாக  அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டதையொட்டி,  அதனை வரவேற்கும் வகையில் ஸ்டிக்லால் தெருவில் வானவில் நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்ட கொடிகளுடன் ஆயிரக்கணக்கான ஓரினச் சேர்க்கையாளர்கள் பெருமித  பேரணியில் கலந்து கொண்டனர்.

இந்தப் பேரணிக்கு அந்நாட்டு அரசு தடை விதித்து இருந்தது நிலையில், அதனை மீறி அவர்களது பேரணி தொடங்கியது.

இதனையடுத்து சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு, தடையை மீறி பேரணி நடத்திய ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் மீது கண்ணீர் குண்டுகளையும் ரப்பர் குண்டுகளையும் பயன்படுத்தி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.இதனால் பேரணியில் பெரும் குழப்பம் ஏற்பட்டு நாலாபுறம் அவர்கள் சிதறி ஓடினர். அதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. போலீசாரின் தாக்குதலால் பெரும் பரபரப்பும் பதற்றமும் துருக்கியில் ஏற்பட்டது.

ஓரினச் சேர்க்கையாளர்கள் பேரணியில் நடத்தப்பட்ட போலீசாரின் தாக்குதலுக்கு உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு