Published:Updated:

ஓரினச் சேர்க்கைத் திருமணத்தை வரவேற்ற ஒபாமா, ஹிலாரிக்கு ஜிண்டால் கண்டனம்!

ஓரினச் சேர்க்கைத் திருமணத்தை வரவேற்ற ஒபாமா, ஹிலாரிக்கு ஜிண்டால் கண்டனம்!
ஓரினச் சேர்க்கைத் திருமணத்தை வரவேற்ற ஒபாமா, ஹிலாரிக்கு ஜிண்டால் கண்டனம்!

ஓரினச் சேர்க்கைத் திருமணத்தை வரவேற்ற ஒபாமா, ஹிலாரிக்கு ஜிண்டால் கண்டனம்!

ஓரினச் சேர்க்கைத் திருமணத்தை வரவேற்ற ஒபாமா, ஹிலாரிக்கு ஜிண்டால் கண்டனம்!

வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் ஓரினச் சேர்க்கை திருமணத்திற்கு உச்சநீதிமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது.  அதிபர் ஒபாமா மற்றும் ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் இதற்கு வரவேற்பு  தெரிவித்துள்ளதற்கு பாபி ஜிண்டால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

அமெரிக்க அதிபர்  தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. அதில் போட்டியிடப்போவதாக லூசியானா மாகாண ஆளுநர் பாபி ஜிண்டால், சில நாட்களுக்கு முன்பு அறிவித்து அதற்கான பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில்,  குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஏற்கனவே 12 பேர் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், பாபி ஜிண்டால் 13 ஆவது நபராக தன்னை வேட்பாளராக அறிவித்து பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் ஓரின ஜோடிகளின் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தது. இது தொடர்பான ஒரு வழக்கை அந்த நாட்டின் உச்சநீதிமன்றத்தில்  9 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது.

விசாரணை முடிவில், ஓரின ஜோடிகளின் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கி நீதிபதிகள் வெள்ளிக்கிழமை தீர்ப்பு அளித்தனர். அமெரிக்காவில் 36 மாகாணங்களில் ஏற்கெனவே ஓரின ஜோடி திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் இருந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவினால் 14 மாநிலங்களில் நீடித்த தடை நீங்கியது. லூசியானாவில் ஓரினச் சேர்க்கை  திருணத்திற்கு தடை இருந்து வந்தது. உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவினால் அம்மாநிலத்திற்கும் இதனை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமண அங்கீகாரம் குறித்த தீர்ப்புக்கு அதிபர் ஒபாமா மற்றும் அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள ஹிலாரி கிளிண்டன்  பாராட்டு தெரிவித்து இருந்தனர்.

இது குறித்து ஜிண்டால் "திருமணம் என்பது எனது பார்வையில் என்னுடைய கிறிஸ்தவ நம்பிக்கையின்படியிலானது. முந்தைய நீதிமன்ற  முடிவுகள் அதனை மாற்றுவதாக இருந்தது கிடையாது. திருமணம் என்பது ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே நடைபெறுவதே” என்று கருத்து தெரிவித்து உள்ளார்.

மேலும் அவர், " உச்ச நீதிமன்றம்  தன்னிச்சையாக கட்டுப்பாடுகள் இன்றி செயல்படுகிறது, தனது விருப்பத்திற்கு ஏற்ப விதிகளை உருவாக்குகிறது. பொறுப்பான நீதிமன்ற அமைப்பாக அது செயல்படாமல், ஒரு கருத்துக் கணிப்பு மையம் போன்று செயல்படுகிறது. திருமணம் என்பது ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையிலானது என்பது கடவுளால் எழுதப்பட்டது. இதனை நீதிமன்றத்தால்  மாற்ற முடியாது. இந்த உத்தரவு கிறிஸ்தவர்களின் மத சுதந்திரத்துக்கு எதிராக உள்ளது. இந்த விவகாரத்தில் மதச் சுதந்திரத்தை காப்பாற்ற போராடுவேன். எனது போராட்டத்துக்கு குடியரசு கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் ஆதரவு அளிக்க வேண்டும்" என்றும் அவர் கூறியிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு