Published:Updated:

உலகப் பொருளாதாரம் மந்தமாகும் என்று ரகுராம் சொல்லவில்லை: ரிசர்வ் வங்கி மறுப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

உலகப் பொருளாதாரம் மந்தமாகும் என்று ரகுராம் சொல்லவில்லை: ரிசர்வ் வங்கி மறுப்பு!

லண்டன்:  உலகப்  பொருளாதாரம் மந்த நிலையை அடையும் என இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் கூறவில்லை என்று  ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்துள்ளது.

லண்டன் நகரில் உள்ள `லண்டன் வர்த்தக கல்வி நிறுவன`த்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார் கவர்னர் ரகுராம் ராஜன்.  அப்போது அவர், "1930 ஆம் ஆண்டு பெரும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது. அதே போன்றதொரு நிலைமைக்குள் இப்போது மெதுவாகச்  சென்று கொண்டிருக்கிறோம் என்பது கவலை அளிக்கிறது" எனk கூறியதாக செய்திகள்  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

ஆனால் தற்போது அந்த செய்தியை மறுத்துள்ள ரிசர்வ் வங்கி , "உலகம் முழுவதும் உள்ள முக்கிய மத்திய வங்கிகள் தொடர்ந்து பின்பற்றி வரும் கொள்கைகளால் 1930 ஆம் ஆண்டு பின்பற்றப்பட்ட கொள்கையான ஏற்றுமதியை அதிகரித்து, இறக்குமதியைக் குறைக்கும் நிலைக்கு தள்ளப்படலாம் என்றுதான் ரகுராம் ராஜன் கூறினார். தற்போதைய நிலையில் உலக பொருளாதாரம் பெரும் மந்த நிலையை அடைய வாய்ப்பில்லை" என்று தெரிவித்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு