Published:Updated:

வோல்க்ஸ்வேகன் தொழிற்சாலையில் ஊழியரை கொன்றது ரோபோ: ஜெர்மனியில் அதிர்ச்சி

விகடன் விமர்சனக்குழு
வோல்க்ஸ்வேகன் தொழிற்சாலையில் ஊழியரை கொன்றது ரோபோ: ஜெர்மனியில் அதிர்ச்சி
வோல்க்ஸ்வேகன் தொழிற்சாலையில் ஊழியரை கொன்றது ரோபோ: ஜெர்மனியில் அதிர்ச்சி

பெர்லின்: ஜெர்மனியின் வோல்க்ஸ்வேகன் கார் தொழிற்சாலையில் ரோபோ ஒன்று ஊழியர் ஒருவரை கொன்ற சம்பவம் பணியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வோல்க்ஸ்வேகன் தொழிற்சாலையில் ஊழியரை கொன்றது ரோபோ: ஜெர்மனியில் அதிர்ச்சி

ஜெர்மனி பிராங்பர்ட் நகர் அருகே இருக்கும் வோல்க்ஸ்வேகன் தொழிற்சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறும் போது "உற்பத்தி பிரிவை சேர்ந்த கார் பாகங்களை கையாளும் ரோபோ ஒன்றை சீரமைக்கும் பணியில் 22 வயது இளைஞர் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த இளைஞரை கவ்வி பிடித்த ரோபோ அவரை உலோக தகட்டோடு வைத்து அழுத்தியுள்ளது. இதில் அவர் படுகாயம் அடைந்து உயிரிழந்து விட்டார்" என்று கூறினார்.

வோல்க்ஸ்வேகன் தொழிற்சாலையில் ஊழியரை கொன்றது ரோபோ: ஜெர்மனியில் அதிர்ச்சி

அந்த இளைஞர் பற்றிய விபரங்களை வெளியிட நிர்வாகம் மறுத்துவிட்டது. மேலும் இந்த விபத்திற்கு மனித தவறு தான் காரணம் எனவும் நிர்வாகம் கூறியுள்ளது. ஊழியரை ரோபோ கொன்ற சம்பவம் ஜெர்மனியில் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.