Published:Updated:

ஐ.எஸ். தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற போட்டி அமைப்பு: சிரியாவில் மோதல் தீவிரம்!

விகடன் விமர்சனக்குழு
ஐ.எஸ். தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற போட்டி அமைப்பு: சிரியாவில் மோதல் தீவிரம்!
ஐ.எஸ். தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற போட்டி அமைப்பு: சிரியாவில் மோதல் தீவிரம்!

டமாஸ்கஸ்: சிரியாவில் 18 ஐ.எஸ். தீவிரவாதிகளைப் பிடித்து சுட்டுக் கொன்றுள்ளது ஜெய்ஸ் அல்-இஸ்லாம் என்ற போட்டி தீவிரவாத அமைப்பு.இதனால் தீவிரவாத அமைப்புகள் மத்தியில் மோதல் கடுமையாகியுள்ளது.

ஐ.எஸ். தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற போட்டி அமைப்பு: சிரியாவில் மோதல் தீவிரம்!

இதுவரை ஐ.எஸ். தீவிரவாதிகள்தான் தங்கள் கையில் கிடைத்தவர்களின் தலைகளைத் துண்டித்து தண்டனை என்ற பெயரில் கொடூரங்களைச் செய்து வந்தனர். இப்போது முதல்முறையாக ஐ.எஸ். தீவிரவாதிகள் 18 பேரைப் பிடித்து போட்டி அமைப்பினர் கொன்றுள்ளனர்.

இது தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகள் 18 பேர் கருப்பு நிற உடையணிந்து, கை மற்றும் கால்களில் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் உள்ளனர். அவர்கள் அருகே ஆரஞ்சு நிற உடையில் இருக்கும் ஜெய்ஸ் அல்-இஸ்லாம் தீவிரவாதிகள் அவர்களது தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்கின்றனர்.

அந்த வீடியோவில் பதிவாகியுள்ள காட்சிகளில் ஐஎஸ் தீவிரவாதிகள், நாங்கள் சிரியா ராணுவத்துக்கு எதிராகப் போராடவில்லை. பிற போராளி அமைப்புகளுக்கு எதிராகவே சண்டையிட்டு வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

ஜெய்ஸி அல்-இஸ்லாம் தீவிரவாத அமைப்பினரும் சன்னி பிரிவை சேர்ந்தவர்கள்தான். ஆனால் ஐ.எஸ். தீவிரவாதிகள் சன்னி முஸ்லிம்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஷியா முஸ்லிம் மற்றும் பிற முஸ்லிம் பிரிவினருக்கு ஆதரவாக செயல்பட்டு ஐ.எஸ். தீவிரவாதிகள் துரோகம் இழைக்கின்றனர். சிரியா அதிபர் பஷார் அல் ஆசாதுடன் ஐ.எஸ். அமைப்பினர் ரகசியமாக தொடர்பில் உள்ளனர் என்று வீடியோவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இந்த வீடியோ தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தங்கள் இயக்கத்தை சேர்ந்த 3 உறுப்பினர்களின் தலையை ஐ.எஸ். தீவிரவாதிகள் துண்டித்தனர். அதற்குப் பழிவாங்கும் வகையில் இப்போது 18 பேரைக் கொன்றுள்ளதாகவும் ஜெய்ஸி அல்-இஸ்லாம் தீவிரவாத அமைப்பு கூறியுள்ளது. கடந்த வாரம் தங்களுக்குப்  போட்டியாகச் செயல்படும் தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த 12 பேரின் கழுத்தை அறுத்து கொலை செய்து ஐ.எஸ். தீவிரவாதிகள் வீடியோ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.