Published:Updated:

மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானது: இங்கிலாந்து உணவு அமைப்பு தகவல்!

மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானது: இங்கிலாந்து உணவு அமைப்பு தகவல்!
மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானது: இங்கிலாந்து உணவு அமைப்பு தகவல்!
மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானது: இங்கிலாந்து உணவு அமைப்பு தகவல்!

லண்டன்: இந்தியாவில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கிறது என்பதால் தடை செய்யப்பட்டுள்ள மேகி நூடுல்ஸ் உணவுப் பொருள் தரமானதே என்று இங்கிலாந்தின் உணவு தரநிலைகள் அமைப்பு கூறியுள்ளது பரபரப்பினை உண்டாக்கியுள்ளது.   

இந்தியாவின் பெரும்பான்மையான குடும்பங்களில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பிடித்தமான உணவாக விளங்கி வந்த மேகி நூடுல்சில், காரீயம் மற்றும் மோனோ சோடியம் குளூட்டாமேட் போன்ற ரசாயன பொருட்கள் அதிக அளவில் கலந்திருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மேகி நூடுல்சுக்கு இந்தியா முழுவதும் தடை விதிக்கப்பட்டது. இது பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், இந்தியாவில் மேகி நூடுல்ஸ் குறித்த சர்ச்சை எழுந்ததையடுத்து அவற்றை  ஆய்வுக்குட்படுத்த இங்கிலாந்து நாட்டின் உணவு தர நிலைகள் முகமை திட்டமிட்டது.அதன்படி செய்யப்பட்ட   ஆய்வில் மேகி நூடுல்ஸ் உண்பதற்கு முற்றிலும் பாதுகாப்பானது என்று கூறியுள்ள அந்த அமைப்பு மேகி நூடுல்ஸ்சிற்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளது.

அதேபோல், வியட்நாம் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மேகி நூடுல்ஸ்கள் பாதுகாப்பானதுதான் என்று தெரிவித்துள்ளது கவனித்தக்கது.

நெஸ்லே இந்தியா நிறுவனம் தற்போது, மேகி நூடுல்ஸை கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர், கென்யா, மற்றும் மூன்றாம் தரப்பு மூலமாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.