Published:Updated:

விவசாய பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட நேபாள அமைச்சர் பதவி விலகல்!

விகடன் விமர்சனக்குழு
விவசாய பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட நேபாள அமைச்சர் பதவி விலகல்!
விவசாய பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட நேபாள அமைச்சர் பதவி விலகல்!

காட்மாண்டு: நேபாள நாட்டின் விவசாய பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட புகாரில் அந்நாட்டு வேளாண்மை மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ஹர் பிரசாத் பரஜுலி பதவி விலகியுள்ளது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

விவசாய பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட நேபாள அமைச்சர் பதவி விலகல்!

சர்ச்சையில் சிக்கியுள்ள அமைச்சர் பரஜூலி, கடந்த செவ்வாய்க் கிழமை நெல் நடவு பருவத்தின் தொடக்கத்தில் நடைபெற்ற கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார். அப்போது அங்கு இருந்த விவசாய பெண்களிடம் இவர் மிகவும் மோசமாக நடந்து கொண்டதாக கூறப்பட்டது.  பாலியல் ரீதியாகவும் அத்துமீறினார் என்று பலமான குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக வீடியோ மற்றும் புகைப் படங்கள் சமூக வலை தளங்களில் பரவியது. இது குறித்து பரஜுலியின் செய்தி தொடர்பாளர் சூர்யா தபா இது வேண்டும் என்றே புனையபட்டது. அவருக்கு எதிரான பொது கருத்துக்கள் மற்றும் குற்றச் சாட்டுகளைத்  தொடர்ந்து அவர் ராஜினாமா செய்தார் என்று கூறினார்.

விவசாய பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட நேபாள அமைச்சர் பதவி விலகல்!

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி, இந்த வீடியோ மற்றும் புகைப் படங்களை பார்க்கும் போது அவரது நடத்தை கண்ணியமற்றதாக  இருந்தது அவர் பொது நல்லொழுக்கத்தின் எல்லையைக் கடந்து உள்ளார் என தெரிவித்துள்ளது.

பிரதமர் சுசில் குமார் கொய்ராலா செய்தி ஊடக ஆலோசகர் அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப் பட்டதை உறுதி செய்து உள்ளார்.நேபாள அரசியலில் அமைச்சர் ஒருவரே பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.