Published:Updated:

வெள்ளை மாளிகையில் புகைப்படம் எடுக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

விகடன் விமர்சனக்குழு
வெள்ளை மாளிகையில் புகைப்படம் எடுக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம்!
வெள்ளை மாளிகையில் புகைப்படம் எடுக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம்!
வெள்ளை மாளிகையில் புகைப்படம் எடுக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

வாஷிங்டன்: அமெரிக்காவிலுள்ள வெள்ளை மாளிகைக்குள் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் மாகாணத்தில் இருக்கும் வெள்ளை மாளிகை, உலகின் அதிகாரமிக்க மாளிகைகளில் ஒன்று. எனவே, இதன் பாதுகாப்பைக் கருதி கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வரும் சுற்றுலா பயணிகள் புகைப்படம், வீடியோ மற்றும் செல்ஃபிக்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த தடையை அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவியும், அந்நாட்டு முதல் குடிமகளுமான மிச்செல் ஒபாமா நீக்கியுள்ளார். இதற்கான அறிவிப்பை தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

புகைப்படம் எடுக்க தடை நீக்கப்பட்டிருந்தும், ப்ளாஷ் பயன்படுத்தவும், வீடியோ எடுக்கவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஒரு சில முக்கிய இடங்களில் செல்ஃபி எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

படம் எடுப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியதைத் தொடர்ந்து, இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் செல்ஃபி எடுத்து அந்த புகைப்படங்களை, தங்களது சமூக வலைதளங்களில் 'செல்ஃபி வித் ஒயிட் ஹவுஸ்' என பதவியேற்றம் செய்து வருகின்றனர்.