Published:Updated:

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு

வாஷிங்டன், நவ.12,2011

அமெரிக்காவில் பலத்த பாதுகாப்புக்குரிய வெள்ளை மாளிகை அருகே இன்று காலையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்க அதிபர்கள் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் வசிப்பது வழக்கம். தற்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவும் அங்கு வசித்து வருகிறார்.

தற்போது அவர் ஹவாய் தீவில் நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்ளும் வழியில் கலிபோர்னியாவுக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் மர்ம நபர்கள் சிலர் வெள்ளை மாளிகை அமைந்துள்ள பகுதியில் இன்று காலை இந்திய நேரப்படி 8.10 மணிக்கு திடீரென்று சரமாரியாக சுட்டனர். 

துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதும் பாதுகாப்பு அதிகாரிகள் ஓடி வந்தனர். அவர்கள் ரூசுவெல்டு பாலம் வழியாக ஓடிச் சென்றதை பாதுகாப்பு அதிகாரிகள் பார்த்தனர். ஆனால், வெள்ளை மாளிகை மீது துப்பாக்கி குண்டுகள் எதுவும் பாயவில்லை. யாரும் காயமும் அடையவில்லை.

வெள்ளை மாளிகை அமைந்துள்ள பகுதிக்கு அருகில் உள்ள சாலையிலிருந்து அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு ஓடியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளை மாளிகை அருகே உள்ள 15 மற்றும் 17வது சாலைகளுக்கு இடையே உள்ள பகுதி மூடப்பட்டது. பாதுகாப்பு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.