Published:Updated:

ராஜீவ் காந்தியை தாக்கியவருக்கு இலங்கை தேர்தலில் வாய்ப்பு!

ராஜீவ் காந்தியை தாக்கியவருக்கு இலங்கை தேர்தலில் வாய்ப்பு!
ராஜீவ் காந்தியை தாக்கியவருக்கு இலங்கை தேர்தலில் வாய்ப்பு!

ராஜீவ் காந்தியை தாக்கியவருக்கு இலங்கை தேர்தலில் வாய்ப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ராஜீவ் காந்தியை தாக்கியவருக்கு இலங்கை தேர்தலில் வாய்ப்பு!

கொழும்பு: முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கை சென்றபோது, அவரை துப்பாக்கியால் தாக்கிய அந்நாட்டின் முன்னாள் கடற்படை வீரருக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட, பொது பால சேனா கட்சி வாய்ப்பு வழங்க முன்வந்துள்ளது.

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1987 ஆம் ஆண்டு இலங்கை சென்றபோது, அந்நாட்டின் கடற்படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அப்போது, அந்த அணிவகுப்பில் பங்கேற்ற விஜிதா ரோஹனா டிசெல்வா என்ற வீரர், ராஜீவ் காந்தியின் தோள்பட்டையில் துப்பாக்கியைக் கொண்டு தாக்கினார். அதற்காக இரண்டரை ஆண்டுகள் சிறை வைக்கப்பட்ட விஜிதா ரோஹனா டிசெல்வா, அதன் பிறகு விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் 'பொது ஜன பெரமுனா' கட்சி சார்பில் போட்டியிட விஜிதா வாய்ப்பு கோரி இருந்தார். ஆனால், கட்சியின் அடிப்படை உறுப்பினராகக் கூட அவர் இல்லாதததால், விஜிதாவுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்க முடியாது என்று அக்கட்சியின் தலைவர் திலந்தா விதநாகே தெரிவித்துள்ளார்.

ஆனால், அதே நேரம், 'பொது ஜன பெரமுனா' கட்சியின் தாய்க் கழகமான 'பொது பால சேனா' கட்சி விஜிதாவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க முன்வந்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு