Published:Updated:

கனடா: வேன் - ட்ரக் மோதி விபத்து; இந்திய மாணவர்கள் 5 பேர் பலி - இந்திய வெளியுறவுத்துறை இரங்கல்

கனடா சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் 5 பேர் பலி

கனடாவின் ஒன்டாரியோவிலுள்ள குயின்ட் வெஸ்ட் நகரில் வேன், ட்ரக் மோதிக்கொண்டதில் 5 இந்திய மாணவர்கள் பலியான நிலையில் மேலும் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கனடாவில் கடந்த சனிக்கிழமையன்று ஒன்டாரியோவில் உள்ள குயின்ட் வெஸ்ட் நகரில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஐந்து இந்திய மாணவர்கள் உயிரிழந்ததாக கனடா காவல்துறையினர் கூறியுள்ளனர். இது குறித்து அவர்கள் தகவல் தெரிவித்ததில், கடந்த சனிக்கிழமை அதிகாலை 3:45 மணியளவில், இந்திய மாணவர்கள் பயணித்த வேன், மேற்கு நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ட்ரக் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில், இந்திய மாணவர்கள் ஐந்து பேர் உயிரிழந்ததாகவும், மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கனடா காவல்துறையினர் கூறுகின்றனர். பின்னர் உள்ளூர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பலியான இந்திய மாணவர்கள் ஐந்து பேர், ஹர்பிரீத் சிங், ஜஸ்பிந்தர் சிங், கரன்பால் சிங், மோகித் சௌகான், பவன் குமார் எனத் தெரியவந்துள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்வீட்
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்வீட்

இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், இந்த விபத்து குறித்த குற்றச்சாட்டுகள் ஏதும் பதியப்படவில்லை. இதையடுத்து கனடாவுக்கான இந்திய உயரதிகாரி அஜய் பிசாரியா இந்தச் சம்பவத்தை "இதயத்தை உடைக்கும் சோகம்" என்று குறிப்பிட்டு தனது இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.

இந்தச் செய்தியறிந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "கனடாவில் ஐந்து இந்திய மாணவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். அவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள். கனடாவின் இந்திய துணைத் தூதரகம் தேவையான அனைத்து ஆதரவையும் உதவியையும் வழங்கும்" என்று இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism