Published:Updated:

ஜெர்மனி: 70 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்துச் சிதறிய இரண்டாம் உலகப்போரின் குண்டு; 5 பேர் படுகாயம்!

ஜெர்மனி
News
ஜெர்மனி ( AP )

தற்போது ஜெர்மனியில் வெடித்திருக்கும் குண்டு, இரண்டாம் உலகப்போரின்போது எதிரி நாடுகளால் அந்த நாட்டின் மீது வீசப்பட்டது என்று கூறப்படுகிறது.

ஜெர்மனியின் மியூனிச் நகரத்திலிருக்கும் பிஸியான, அதிக ஆள் நடமாட்டமுள்ள ஒரு ரயில்வே நிலையத்துக்கு அருகிலிருந்த பாலத்தில் இன்று திடீரென குண்டு வெடித்தது. அதில், நான்கு பேர் படுகாயமடைந்தனர். ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். தற்போது ஜெர்மனியில் வெடித்திருக்கும் குண்டு, இரண்டாம் உலகப்போரின்போது எதிரி நாடுகளால் அந்த நாட்டின்மீது வீசப்பட்டது என்று கூறப்படுகிறது. ஜெர்மனியில் கடந்த ஓராண்டில் மட்டும் எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்ற நிலையிலிருந்த ஏராளமான குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுச் செயலிழக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

ம்யூனிச் நகரம்
ம்யூனிச் நகரம்
AP

இரண்டாம் உலகப்போரின்போது, ஆங்கிலேய, அமெரிக்க விமானங்கள் ஜெர்மனியின் மீது 1.5 மில்லியன் டன் , எடைகொண்ட குண்டுகளை வீசினர். அதில், சுமார் 60,000 பேர் கொல்லப்பட்டனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆனால் , அவர்கள் வீசிய குண்டுகளில் 15 சதவிகித குண்டுகள் வெடிக்கவில்லை. அவற்றில் சில மண்ணுக்குள் புதைந்துவிட்டன. அந்த குண்டுகள் 20 அடி ஆழத்தில் புதைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

முனிச் நகரம்
முனிச் நகரம்
AP

இந்த நிலையில், ம்யூனிச் நகரத்தில் சுரங்கம் தோண்டும்போது இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. குறிப்பிட்ட பகுதியைத் தவிர்த்து, அந்த நகரத்தின் பிற பகுதிகளில் பெரிய சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். முன்னதாக, 2012-ல் ஒரு குண்டு வெடித்து ம்யூனிச் நகரின் பதினேழு பெரிய கட்டடங்கள் கடுமையாகச் சேதமடைந்தன. ஏராளமான கட்டடத் தொழிலாளர்களும் உயிரிழந்தனர். ஜெர்மனியின் நகரங்களில் புதைந்துகிடக்கும் இந்த குண்டுகள் வெடிக்கலாம், எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற நிலையில் மக்கள் அச்சத்துடனே காலத்தைக் கடத்திக்கொண்டிருக்கின்றனர்.