Published:Updated:

`உக்ரைனிலிருந்து ஊடுருவ முயன்ற 5 பேர் சுட்டுக்கொலை!’ - ரஷ்ய ராணுவம்

உக்ரைன்

உக்ரைனிலிருந்து ரஷ்ய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 5 பேர் சுட்டுக்கொலை, இன்று காலை 6 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக ரஷ்ய ராணுவம் அறிவிப்பு.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையேயான பிரச்னையானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ரஷ்யாவின் செயலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்த போதிலும் ரஷ்யாவின் செயல்பாடுகள் எல்லாம் போர் சூழ்நிலையை உருவாக்குவது போன்றே தெரிகிறது என பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், உக்ரைனிலிருந்து ரஷ்ய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர் என ரஷ்ய ராணுவம் இன்று(பிப்ரவரி 21) கூறியுள்ளது.

உக்ரைன்  -  ரஷ்யா போர்ப் பதற்றம்
உக்ரைன் - ரஷ்யா போர்ப் பதற்றம்
ட்விட்டர்

இந்த சம்பவம் ரோஸ்டோவ் பகுதியில் உள்ள மித்யாகின்ஸ்காயா கிராமத்திற்கு அருகில் காலை 06:00 மணிக்கு நடந்தாக ரஷ்ய ராணுவம் குறிப்பிட்டுள்ளது. ரஷ்ய ராணுவம் வெளியிட்டுள்ள இந்த செய்தி உக்ரைன் மக்களிடையே போர் பதட்டத்தை இன்னும் அதிகரிக்கச் செய்துள்ளது. மேலும் ரஷ்யாவின் இந்த நடவடிக்கையால், ஏற்கெனவே அமெரிக்கா கூறியிருந்தது போல வரும் வாரம் அல்லது வரும் நாள்களில் போர் மூண்டுவிடுமோ என பலரும் அச்சத்தில் உள்ளனர்.