Published:Updated:

போர்க்குற்ற வழக்கில் கடாபி மகனுக்கு மரண தண்டனை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
போர்க்குற்ற வழக்கில் கடாபி மகனுக்கு மரண தண்டனை!
போர்க்குற்ற வழக்கில் கடாபி மகனுக்கு மரண தண்டனை!

போர்க்குற்ற வழக்கில் கடாபி மகனுக்கு மரண தண்டனை!

போர்க்குற்ற வழக்கில் கடாபி மகனுக்கு மரண தண்டனை!

திரிபோலி: போர் குற்றங்களுக்காக லிபியாவின் முன்னாள் அதிபர் மும்மர் கடாபியின் மகன் சயிஃப் அல் இஸ்லாமுக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

லிபியாவில் 1969ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு கிளர்ச்சிப்படையினரால் வீழ்த்தப்படுகிறவரை, சர்வாதிகாரியாக இருந்து ஆட்சி செய்தவர் மும்மர் கடாபி. பதவியில் இருந்து விரட்டப்பட்டதை தொடர்ந்து அவர் கிளர்ச்சிப்படையினரால் பிடிக்கப்பட்டு, சுட்டுக்கொல்லப்பட்டார்.

மேலும், கடாபியின் மகன் சயீஃப் அல் இஸ்லாம்  உள்பட பலர் மீதும் 2011ஆம் ஆண்டு நடந்த கிளர்ச்சியின்போது போர்க்குற்றம் செய்ததாக லிபியா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் விசாரணை நடத்திய நீதிமன்றம், சயீஃப் அல் இஸ்லாம் உள்பட 9 பேருக்கும் மரண தண்டனை விதித்து இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது. வழக்கின் தீர்ப்புக்காக அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்படவில்லை. வீடியோ கான்பரன்ஸ் முறையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கடாபி ஆட்சிக்காலத்தில் உளவுத்துறை தலைவராக இருந்த அப்துல்லா அல் செனோயுசி என்பவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தண்டிக்கப்பட்டவர்கள் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு