Published:Updated:

இலங்கை: சரத் பொன்சேகாவுக்கு 3 ஆண்டுகள் சிறை

Vikatan Correspondent
இலங்கை: சரத் பொன்சேகாவுக்கு 3 ஆண்டுகள் சிறை
இலங்கை: சரத் பொன்சேகாவுக்கு 3 ஆண்டுகள் சிறை
இலங்கை: சரத் பொன்சேகாவுக்கு 3 ஆண்டுகள் சிறை

கொழும்பு: வெள்ளைக்கொடி வழக்கில், இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதியும், ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சரத் பொன்சேகா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, அவருக்கு 36 மாத கால சிறைத் தண்டனை விதித்து, கொழும்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

விடுதலைப்புலிகள் உடனான இலங்கை ராணுவத்தின் இறுதிக் கட்ட போரின்போது, 'வெள்ளைக் கொடி ஏந்தி சரணடைந்த புலிகளின் உறுப்பினர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷே உத்தரவு பிறப்பித்திருந்ததார்' என ஆங்கில சேனல் ஒன்றுக்கு சரத் பொன்சேகா பேட்டியளித்தார்.

இலங்ககப் பாதுகாப்புக் செயலாளருக்கும், நாட்டுக்கும் களங்கம் ஏற்படும் வகையில் சரத் பொன்சேகா தகவல்களை பொய்யான தகவல்களை வெளியிட்டார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு.

இந்த வழக்கை முதலில் விசாரித்த இலங்கை ராணுவ நீதிமன்றம், சரத் பொன்சேகாவுக்கு 30 மாத சிறைத்தண்டனை விதித்தது.

இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த கொழும்பு நீதிமன்றம், சரத் பொன்சேகா குற்றவாளி என அறிவித்தது. அவருக்கு 36 மாத கால சிறைத்தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தது.

இந்தத் தண்டனையுடன் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதனை செலுத்த தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்தத் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்கள் நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீதிமன்ற வளாகத்தில் சரத் பொன்சேகா கூறுகையில், "அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வது பிடிக்காத தரப்பினர் தான் என்னை சிறையில் அடைக்க வேண்டுமென விரும்புகிறார்கள்," என்று சாடினார்.