Published:Updated:

ராஜபக்சேவுக்கு பிரதமர் பதவி கிடையாது: அதிபர் சிறிசேனா உறுதி!

Vikatan Correspondent
ராஜபக்சேவுக்கு பிரதமர் பதவி கிடையாது: அதிபர் சிறிசேனா உறுதி!
ராஜபக்சேவுக்கு பிரதமர் பதவி கிடையாது: அதிபர் சிறிசேனா உறுதி!
ராஜபக்சேவுக்கு பிரதமர் பதவி கிடையாது: அதிபர் சிறிசேனா உறுதி!

கொழும்பு: நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் கட்சி வெற்றி பெற்றாலும், ராஜபக்சேவுக்கு பிரதமர் பதவி அளிக்கப்படாது என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா உறுதிபடத் தெரிவித்து உள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்திற்கு வருகின்ற திங்கட்கிழமை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கு அதிபர் சிறிசேனா கடிதம் ஒன்று எழுதி உள்ளார்.

அதில், ''நமது இலங்கை சுதந்திரக் கட்சி இடம்பெற்றுள்ள ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணி, நாடாளுமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றாலும் உங்களை (ராஜபட்ச) நான் பிரதமராக நியமிக்க மாட்டேன்.

நமது கட்சியில் தகுதியுடைய மூத்த தலைவர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களில் ஒருவரைதான் நான் பிரதமராகத் தேர்வு செய்வேன். ஏனெனில், நீங்கள் இரண்டு முறை அதிபர் பதவியில் இருந்ததுடன், அதை நிலையாகத் தக்கவைத்துக்கொள்ள முயன்றதன் மூலம் கட்சியின் மூத்த தலைவர்களுக்கான வாய்ப்பை தட்டிப் பறித்தீர்கள். தேர்தலில் போட்டியிட உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாவிட்டால், கட்சி உடைந்துவிடும் என மிரட்டல் இருந்ததாலேயே, அதற்கு நான் ஒப்புக் கொண்டேன்" என்று கூறியுள்ளார்.