Published:Updated:

பாக். எல்லையில் தினமும் இந்தியா தாக்குதல் நடத்துவதாக குற்றச்சாட்டு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பாக். எல்லையில் தினமும் இந்தியா தாக்குதல் நடத்துவதாக குற்றச்சாட்டு!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் எல்லையில் தினமும் இந்திய ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது என்று பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் சயித் குர்ஷித் ஷா குற்றஞ்சாட்டி உள்ளார்.

பாகிஸ்தானின் முக்கிய எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவரும், தேசிய அவையின் எதிர்க்கட்சி தலைவரான சயித் குர்ஷித் ஷா இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''சமீபகாலமாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தீவிரமான பகைமை போக்கை கொண்டுள்ளது. இந்திய ராணுவம் வேண்டுமென்றே பாகிஸ்தானை வம்பாக சண்டைக்கு இழுக்கிறது.

இந்த விஷயத்தை சரியாக கையாள பாகிஸ்தான் அரசு தவறியதுடன் இதனை சர்வதேச சமூகத்துக்கு எடுத்துச் செல்லவில்லை. இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் நாள் தவறாமல் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. அங்கு நடப்பது என்ன என்பதை உலகுக்கு பாகிஸ்தான் அரசு எடுத்துச் சொல்ல வேண்டும். இந்தியாவை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து பாகிஸ்தான் ராணுவமும், அரசியல் தலைமையில் கூடி ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு