Published:Updated:

இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுமா? பாக்.கிடம் முடிவை தள்ளியது இந்தியா!

இருதரப்பு  பேச்சுவார்த்தை நடைபெறுமா? பாக்.கிடம் முடிவை தள்ளியது இந்தியா!
இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுமா? பாக்.கிடம் முடிவை தள்ளியது இந்தியா!

இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுமா? பாக்.கிடம் முடிவை தள்ளியது இந்தியா!

இருதரப்பு  பேச்சுவார்த்தை நடைபெறுமா? பாக்.கிடம் முடிவை தள்ளியது இந்தியா!

இஸ்லாமாபாத்:  காஷ்மீர் பிரச்னை இடம்பெறாமல் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு  வாய்ப்பில்லை என பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அசிஸ் தெரிவித்துள்ள நிலையில், பேச்சுவார்த்தையில் காஷ்மீர் பிரச்னை இடம்பெறாது என சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார். இதனால், நாளை இருநாட்டு அதிகாரிகளின் பேச்சுவார்த்தை நடக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் - பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அசிஸ் ஆகியோர் தீவிரவாத தடுப்பு நடவடிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டம் டெல்லியில் வரும் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அசிஸ், "இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருடனான சந்திப்பின்போது, காஷ்மீர் பிரச்னையைத்  தவிர்த்துவிட்டு பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பில்லை. காஷ்மீர் பிரச்னை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் அளவிலான பேச்சுவார்த்தையின் ஒரு அங்கமல்ல என இந்தியா கூறியிருப்பது மிகவும் தவறானது.

பிரிவினைவாத தலைவர்களுடனான பாகிஸ்தான் ஆலோசனைக்கு கெடுபிடி செய்வது ஏற்புடையதல்ல.
ஹூரியத் தலைவர்களை சந்திப்பதற்கு இந்தியா தடை விதித்தது, பாகிஸ்தான் யாரை விருந்தினராக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாட்டை, இந்தியா முடிவு செய்வதுபோல இருக்கிறது. ஹூரியத் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டது பாகிஸ்தானை வெகுவாகப் பாதித்துள்ளது. இச்செயல் அவர்கள் அடிப்படை உரிமையைப்  பறிப்பதுபோல் உள்ளது.

இத்தகைய இக்கட்டான சூழலிலும் இதுவரை இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை ரத்தாகவில்லை. நான் இப்போதுகூட பேச்சுவார்த்தைக்காக டெல்லி செல்ல ஆயத்தமாகவே இருக்கிறேன். டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றால், பாகிஸ்தானில் ரா அமைப்பின் செயல்பாடுகள் தொடர்பாக 3 ஆதாரங்கள் அடங்கிய கோப்புகளை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடம் வழங்கவிருக்கிறேன்" என்றார்.

காஷ்மீர் பிரச்னை இடம் பெறாது

இருதரப்பு  பேச்சுவார்த்தை நடைபெறுமா? பாக்.கிடம் முடிவை தள்ளியது இந்தியா!

இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ''உபாவில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் பிரதமர்கள் சந்திப்பின்போது, காஷ்மீர் பிரச்னை குறித்து பேச்சு வார்த்தை நடத்தவதற்கான முடிவு எதுவும் செய்யப்படவில்லை. இருநாட்டு தீவிரவாதம் குறித்து தான் பேச முடிவு செய்யப்பட்டது.

ஆனால், தற்போது, பாகிஸ்தான் புதிய பிரச்னைகளை சேர்க்க கோருகிறது. இது நியாயமில்லை. இந்த பேச்சுவார்த்தையின்போது, காஷ்மீர் பிரச்னை குறித்து பேச பாகிஸ்தான் கோருகிறது. அதேபோல், இருநாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தையின்போது, ஹுரியத் தலைவர்களை 3ஆம் தரப்பாக கோருகிறது. இவற்றை ஏற்க முடியாது.

நாளை மற்றும் நாளை மறுதினம் நடக்கும் இருநாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் கூட்டத்தின்போது, தீவிரவாதம் பற்றி மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும்'' என்றார்.

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் தங்களது நிலையில் உறுதியாக இருப்பதால், நாளை திட்டமிட்டபடி இருநாட்டு அதிகாரிகளின் பேச்சுவார்த்தை நடக்குமா? என சந்தேகம் எழுந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு