Published:Updated:

நாகை மீனவர்கள் 15 பேருக்கு அக். 5-ம் தேதி வரை சிறை!

நாகை மீனவர்கள் 15 பேருக்கு அக். 5-ம் தேதி வரை சிறை!
நாகை மீனவர்கள் 15 பேருக்கு அக். 5-ம் தேதி வரை சிறை!

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 15 பேருக்கு அக்டோபர் 5 ஆம் தேதி வரை சிறைக்காவல் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

நாகை மீனவர்கள் 15 பேருக்கு அக். 5-ம் தேதி வரை சிறை!

நாகபட்டினம் மாவட்டம் நம்பியார் நகர் பகுதியை சேர்ந்த மீனவர்கள் நேற்று முன்தினம் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றிருந்தனர். அவர்கள், பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதிகலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்தப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர், 2 விசைப்படகுகளை சிறைபிடித்தனர். பின்னர் படகுகளையும், அதில் இருந்த 15 மீனவர்களையும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.

இலங்கை கடற்படையினரின் விசாரணைக்கு பின், மீனவர்கள் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலீஸார், மீனவர்களை பருத்திதுறை நீதிபதியின் வீட்டில் நேற்று மாலை ஆஜர்படுத்தினர். ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் 15 பேரையும், அக்டோபர் 5 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து 15 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, சிறைபிடித்து செல்லப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட நாகை மாவட்ட மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

- இரா.மோகன்