Published:Updated:

மணக் கோலத்தில் ஓடோடி சென்று வாலிபரின் உயிரை காப்பாற்றிய பெண்! (வீடியோ)

மணக் கோலத்தில் ஓடோடி சென்று வாலிபரின் உயிரை காப்பாற்றிய பெண்! (வீடியோ)
மணக் கோலத்தில் ஓடோடி சென்று வாலிபரின் உயிரை காப்பாற்றிய பெண்! (வீடியோ)

திருமணம் முடிந்த கையோடு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒருவரின் உயிரை, மணப்பெண் கோலத்தில் இருந்த செவிலியர் காப்பாற்றியுள்ளார். இந்த சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.



சீனாவை சேர்ந்த கு யங்குவான் என்ற 25 வயதுடைய இளம்பெண், அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் இதயநோய் பிரிவில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர், தனது திருமண நிகழ்ச்சி முடிந்தவுடன், தனது கணவரோடு சீனாவின் டாலியான் கடற்கரையில், அழகிய புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, அந்த கடற்கரையில் நீச்சல் விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென மூச்சடைத்த நிலையில் மயங்கி சரிந்துள்ளார்.

இதை பார்த்த அருகில் உள்ளவர்கள் கூட்டமாக கூடினர். இதனைக் கவனித்த யங்குவான், மணப்பெண் கோலத்திலேயே விரைந்து சென்று அந்த நபரை பார்த்துள்ளார். அவர் மூச்சடைத்த நிலையில் இருப்பதை அறிந்து கொண்ட யங்குவான், வாயோடு வாய் வைத்த நிலையில் அவரது உயிரைக் காப்பாற்றும் சிகிச்சையை மேற்கொண்டார்.

சுமார், 20 நிமிடங்கள் மேற்கொள்ளப்பட்ட இந்த சிகிச்சைக்கு பின்னர் அவசர ஊர்தி வந்தவுடன் அந்நபர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த நிகழ்வு வீடியோ எடுக்கப்பட்ட சீனாவின் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளும் வெளியானதைத் தொடர்ந்து, சீன மக்கள் இவரை அற்புத அழகு கொண்ட மணப்பெண் என பாராட்டி வருகின்றனர்.