Published:Updated:

ட்விட்டரில் ஸ்னோடன்: அமெரிக்காவின் உளவு ரகசியங்களை அம்பலப்படுத்தியவர்!

விகடன் விமர்சனக்குழு
 ட்விட்டரில் ஸ்னோடன்: அமெரிக்காவின் உளவு ரகசியங்களை அம்பலப்படுத்தியவர்!
ட்விட்டரில் ஸ்னோடன்: அமெரிக்காவின் உளவு ரகசியங்களை அம்பலப்படுத்தியவர்!

மெரிக்காவின் உளவு ரகசியங்களை அம்பலப்படுத்தி பரபரப்பை உண்டாக்கி, தற்போது தலைமறைவாக இருக்கும் எட்வர்டு ஸ்னோடன் ட்விட்டரில் அடியெடுத்து வைத்திருக்கிறார். டிவிட்டரில் அவரை லட்சக்கணக்கானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.

அமெரிக்க உளவு அமைப்பான என்.எஸ்.ஏ வில் பணியாற்றிய எட்வர்ட் ஸ்னோடன், அமெரிக்கா இணையதளங்களை வேவு பார்ப்பதை ரகசிய ஆவணங்கள் மூலம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால்  அவரை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க உளவு ரகசியங்களை வெளியிட்ட பின், ஸ்னோடன் ரஷ்யாவில் தஞ்சமடைந்து தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். தொடர்ந்து அவர், அமெரிக்காவின் உளவு அமைப்பு செயல்பாடுகள் பற்றி பேசி வருவதுடன் இணைய கண்காணிப்பிற்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார்.

 ட்விட்டரில் ஸ்னோடன்: அமெரிக்காவின் உளவு ரகசியங்களை அம்பலப்படுத்தியவர்!


இந்நிலையில் ஸ்னோடன், குறும்பதிவு சேவையான டிவிட்டரில் இணைந்திருக்கிறார்.@FreedomofPress எனும் ட்விட்டர் கணக்கு மூலம் அவர் ட்விட்டரில் நுழைந்திருக்கிறார்.

ட்விட்டரில் தன்னைப்பற்றிய அறிமுக பக்கத்தில், "அரசுக்காக பணியாற்றிக்கொண்டிருந்தேன்.இப்போது மக்களுக்கு பணியாற்றுகிறேன்” என்று ஸ்னோடன் குறிப்பிட்டுள்ளார்.

டிவிட்டர் நிர்வாகம், ஸ்னோடனின் டிவிட்டர் பக்கம் அதிகாரபூர்வமானது என உறுதிபடுத்தியுள்ளது.

'இப்போது நான் சொல்வதை கேட்க முடிகிறதா? ' எனும் பொருள்பட ஸ்னோடன் முதல் குறும்பதிவை வெளியிட்டார். அடுத்த குறும்பதிவுகள் டிவிட்டரில் உள்ள விண்வெளி வீரர் நீல் டைசனுக்கு பதில் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஸ்னோடன், டிவிட்டரில் அடியெடுத்து வைத்ததுமே பலரும் அவரை ஃபாலோ செய்து வருகின்றனர். முதல் சில  மணி நேரங்களிலேயே அவரது பின் தொடர்பாளர்கள் எண்ணிக்கை ஏழு லட்சத்தை கடந்தது. மணிக்கு 3,000 பின் தொடர்பாளர்கள் எனும் வேகத்தில் அவரக்கு ஆதரவு குவிந்து வருகிறது.

வேகமாக பின் தொடர்பாளர்களை பெறுவதில் ஸ்னோடன் சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்னோடனுக்கு லட்சக்கணக்கில் பின் தொடர்பாளர்கள் குவிந்து வரும் நிலையில், அவர் ஒரே ஒரு கணக்கை மட்டுமே பின் தொடர்கிறார். அது அமெரிக்க உளவு அமைப்பான என்.எஸ்.ஏவின் டிவிட்டர் கணக்கு என்பதுதான் சுவாரஸ்யம்.

-சைபர் சிம்மன்