Published:Updated:

ரஷ்ய தயாரிப்பு 'பக்' ஏவுகணையால் மலேசிய விமானம் எம்.எச்.17 சுட்டு வீழ்த்தப்பட்டதா?

Vikatan Correspondent
ரஷ்ய தயாரிப்பு 'பக்' ஏவுகணையால் மலேசிய விமானம் எம்.எச்.17 சுட்டு வீழ்த்தப்பட்டதா?
ரஷ்ய தயாரிப்பு 'பக்' ஏவுகணையால் மலேசிய விமானம் எம்.எச்.17 சுட்டு வீழ்த்தப்பட்டதா?

டந்த ஆண்டு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்சின்  எம்.எச். 17 விமானம், ரஷ்ய தயாரிப்பான ' பக் ' ரக ஏவுகணையால் சுட்டு  வீழ்த்தப்பட்டதாக நெதர்லாந்தில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷ்ய தயாரிப்பு 'பக்' ஏவுகணையால் மலேசிய விமானம் எம்.எச்.17 சுட்டு வீழ்த்தப்பட்டதா?

கடந்த ஆண்டு ஜூலை 14ஆம் தேதி, நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து, கோலாலம்பூருக்கு மலேசியன் ஏர்லைன்ஸின் எம்.எச்.17 போயிங் 777 ரக விமானம் சென்று கொண்டிருந்தது. உக்ரைன் வான் எல்லையில் 33 ஆயிரம் அடி உயரத்தில்  பறந்துகொண்டிருந்தபோது, விமானம் வெடித்து சிதறியது. இதில் விமானத்தில் இருந்த 298 பேரும் பலியாகினர்.

உக்ரைனில் ரஷ்ய ஆதரவு . கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படையினருக்கும் சண்டை நடந்துகொண்டிருந்த சமயத்தில் இந்த விமானம் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில், நெதர்லாந்து அரசு நியமித்த  விசாரணைக்குழு விசாரணை நடத்தி வந்தது. விமானம் சுடப்பட்டது குறித்து இன்று இரவுக்குள் இந்த குழு முழு அறிக்கையை வெளியிடவுள்ளது.
 

ரஷ்ய தயாரிப்பு 'பக்' ஏவுகணையால் மலேசிய விமானம் எம்.எச்.17 சுட்டு வீழ்த்தப்பட்டதா?

இந்நிலையில் மலேசிய விமானம் தகர்க்கப்பட்டது குறித்து நெதர்லாந்தின் மதிப்புமிக்க பத்திரிகையான 'வாக்ஸ்கிரான்ட்  வெளியிட்டுள்ள செய்தியில், '' மலேசிய விமானம் எம்.எச். 17,  ரஷ்யாவின் தயாரிப்பான 'பக்' ரக ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

அதேவேளையில், "விமானம் 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது, 'பக்' ரக ஏவுகணையை கொண்டு விமானத்தை சுட்டு வீழ்த்தும் திறன் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களிடம்
கிடையாது.  ரஷ்ய ராணுவத்திடம் பயிற்சி பெற்றவர்களின் உதவி கிடைத்திருந்தால்தான்  இதனைச் செய்திருக்க முடியும்" என்றும் அந்தப் பத்திரிகை சந்தேகம் கிளப்பியுள்ளது.

கிழக்கு உச்ரைனில் அரசு துருப்புகளுக்கும், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் மோதல் நடைபெற்றுவரும் டொனாஸ்க் நகரின் அருகில்,  கிரபோவ் என்ற கிராமத்தில்தான் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த கிராமம் ரஷ்ய ஆதரவு  கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ளது.