Published:Updated:

2700 அடி உயரம்...ஹை ஹீல்ஸ்... கயிற்றில் நடந்து அசத்திய இளம் பெண்!

 2700 அடி உயரம்...ஹை ஹீல்ஸ்... கயிற்றில் நடந்து அசத்திய இளம் பெண்!
2700 அடி உயரம்...ஹை ஹீல்ஸ்... கயிற்றில் நடந்து அசத்திய இளம் பெண்!

டெக்சாஸ்: ஹை ஹீல்ஸ் அணிந்துகொண்டு கடல் மட்டத்திலிருந்து 2700 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றில் நடந்து காண்போரை வியக்க வைத்துள்ளார் இளம்பெண் ஒருவர்.
 
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஃபெயித் டிக்கி. 26 வயதான இவர் ஒரு திகில் சாகச விரும்பி. பல்வேறு நிறைய சாகசங்களை செய்தும் திருப்தி அடையாத ஃபெயித் டிக்கி யாரும் செய்ய துணியாத சாகசம் செய்ய முடிவெடுத்தார். அதன்படி சமீபத்தில் Highgirls Brazil Festival என்னும் சாகச நிகழ்ச்சியில்  கலந்து கொண்டார்.

 2700 அடி உயரம்...ஹை ஹீல்ஸ்... கயிற்றில் நடந்து அசத்திய இளம் பெண்!

இந்த சாகச நிகழ்ச்சி பிரேசில் நாட்டின் கடற்கரை நகரமான ரியோ டி ஜெனிரோவில் நடந்தது. அங்குள்ள  2755 அடி உயரம் உள்ள மலைப்பகுதியில் ஹைலைனில்  ஹை ஹீல்ஸ் அணிந்த காலுடன் டிக்கி நடந்து சாதனை படைத்தார்.