Published:Updated:

200 குழந்தை பிணைக் கைதிகளை சுட்டுக் கொன்ற ஐ.எஸ். தீவிரவாதிகள்: அதிர்ச்சி வீடியோ

விகடன் விமர்சனக்குழு
200 குழந்தை பிணைக் கைதிகளை சுட்டுக் கொன்ற ஐ.எஸ். தீவிரவாதிகள்: அதிர்ச்சி வீடியோ
200 குழந்தை பிணைக் கைதிகளை சுட்டுக் கொன்ற ஐ.எஸ். தீவிரவாதிகள்: அதிர்ச்சி வீடியோ

டமாஸ்கஸ்: பிணைக்கைதிகளாக இருந்த 200 குழந்தைகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டுக்கொன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவின் பெரும் பகுதி மற்றும் ஈராக்கின் ஒரு பகுதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி தனி நாடாக அறிவித்துள்ளனர்.  அவர்களை ஒடுக்குவதில், சிரியாவுடன் சேர்ந்து ரஷ்யா, ஃபிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகள் ஈடுபட்டுள்ளன. கிழக்கு சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் வசம் உள்ள Deir az-Zor பகுதியில் எண்ணெய் விநியோக மையம் மற்றும் எரிவாயு தொழிற்சாலை ஆகியவற்றின் மீது  ஃபிரான்ஸ் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின.

200 குழந்தை பிணைக் கைதிகளை சுட்டுக் கொன்ற ஐ.எஸ். தீவிரவாதிகள்: அதிர்ச்சி வீடியோ

இந்தத் தாக்குதல் குறித்து பிரான்ஸ், தீவிரவாதிகளின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்துவதற்காக இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஏற்கெனவே கடந்த மாத இறுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்கள் மீது விமான தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஐ.எஸ். தீவிரவாதிகள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த சிரியாவை சேர்ந்த 200 குழந்தைகளை ஒரே நேரத்தில் சுட்டுக் கொன்ற கொடூரமான வீடியோ பதிவினை ஏமன் நாட்டை சேர்ந்த ஒருவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.