Published:Updated:

இந்தியா, பிரிட்டனுக்கு தீவிரவாத அச்சுறுத்தல்: பிரதமர் மோடி தகவல்!

விகடன் விமர்சனக்குழு
இந்தியா, பிரிட்டனுக்கு தீவிரவாத அச்சுறுத்தல்: பிரதமர் மோடி தகவல்!
இந்தியா, பிரிட்டனுக்கு தீவிரவாத அச்சுறுத்தல்: பிரதமர் மோடி தகவல்!

லண்டன்: இந்தியா மற்றும் பிரிட்டனுக்கு தீவிரவாதம் அச்சுறுத்தலாக இருக்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு பயணமாக நேற்றிரவு பிரிட்டனுக்கு புறப்பட்டுச் சென்றார். இன்று மதியம் லண்டன் சென்றடைந்த அவருக்கு, விமான நிலையத்தில் இந்திய வம்சாவளியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இந்தியா, பிரிட்டனுக்கு தீவிரவாத அச்சுறுத்தல்: பிரதமர் மோடி தகவல்!

இதையடுத்து, லண்டன் டவுனிங் தெருவில் உள்ள பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் இல்லத்துக்கு பிரதமர் மோடி சென்றார். அப்போது பிரதமர் மோடிக்கு ராணுவ வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், இருநாட்டு பிரதமர் மற்றும் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதன் பின்னர் இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் கூறுகையில், ''ஐ.நா. சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக பிரிட்டன் ஆதரவளிக்கும். தீவிரவாதத்தை எதிர்கொள்வது குறித்து மோடியுடன் ஆலோசிக்கப்பட்டது'' என்றார்.

பிரதமர் மோடி கூறுகையில், ''ஐ.நா. சபையில் இந்தியா நிரந்தர உறுப்பிராக ஆதரவளிப்பதற்காக பிரிட்டனுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவின் வளர்ச்சிக்கு பிரிட்டன் செய்து வரும் உதவிக்கும் நன்றி. வணிகம், முதலீடு, ராணுவம் மற்றும் தொழில்நுட்பத்தில் பிரிட்டன் உடனான உறவு வலுப்படுகிறது.

இந்தியா, பிரிட்டனுக்கு தீவிரவாத அச்சுறுத்தல்: பிரதமர் மோடி தகவல்!

2016-ம் ஆண்டு பிப்ரவரியில் இந்தியாவில் நடக்கும் சர்வதேச கப்பற்படை ஆய்வில் பிரிட்டன் பங்கேற்கிறது. பிரிட்டனுடன் ஆக்கப்பூரவ்மான அணுசக்தி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இந்தியாவில் முதலீடு செய்யும் பிரிட்டன் தொழிலதிபர்களுக்கு விரைவாக அனுமதி கொடுக்கப்படும்.

தற்போது சர்வதேச அளவில் தீவிரவாதம் மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அதேபோல், இந்தியாவுக்கும், பிரிட்டனுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கிறது'' என்றார்.