Published:Updated:

அமெரிக்க விளையாட்டு மைதானத்தில் துப்பாக்கிச்சூடு: 16 பேர் படுகாயம்!

Vikatan Correspondent
அமெரிக்க  விளையாட்டு மைதானத்தில் துப்பாக்கிச்சூடு: 16 பேர் படுகாயம்!
அமெரிக்க விளையாட்டு மைதானத்தில் துப்பாக்கிச்சூடு: 16 பேர் படுகாயம்!

நியூ ஓர்லியான்ஸ்: அமெரிக்காவின் விளையாட்டு மைதானம் ஒன்றில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனையடுத்து  அமெரிக்காவில்  
பதட்டம் நிலவுகிறது. 

அமெரிக்காவின், நியூ ஓர்லியான்ஸ் நகரில் உள்ள  பன்னிஃப்ரெண்ட் பார்க் விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை ஒரு இசை வீடியோவுக்கான ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. இதைக் காண்பதற்காக சுமார் 500 பேர் மைதானத்தில் கூடியிருந்தனர். அப்போது திடீரென மர்ம நபர்கள் சிலர் கூட்டத்தை நோக்கி சரமாரியாகச்  சுட்டனர்.

அமெரிக்க  விளையாட்டு மைதானத்தில் துப்பாக்கிச்சூடு: 16 பேர் படுகாயம்!

இதில் 16 பேர் படு காயமடைந்தனர், சம்பவ இடத்திற்கு உடனடியாக போலீசார், ஆம்புலன்சுடன் விரைந்து வந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள யுனிவர்சிட்டி  மெடிக்கல் சென்டரில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவத்தை நேரில் கண்டவர்கள், துப்பாக்கிச்சூட்டில் 2 மர்மநபர்கள் ஈடுபட்டதாகக்  கூறியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.