Published:Updated:

ஒரே மாணவனுக்காக மட்டுமே செயல்படும் பள்ளி: காரணம் என்ன?

Vikatan Correspondent
ஒரே மாணவனுக்காக மட்டுமே செயல்படும் பள்ளி: காரணம் என்ன?
ஒரே மாணவனுக்காக மட்டுமே செயல்படும் பள்ளி: காரணம் என்ன?

இங்கிலாந்தில் உள்ள தீவு பகுதி ஒன்றில், ஒரே மாணவனுக்காக ஒரு பள்ளி செயல்பட்டு வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

ஒரே மாணவனுக்காக மட்டுமே செயல்படும் பள்ளி: காரணம் என்ன?

'ஸ்க்கிரீஸ்' என்ற சமுதாய பள்ளியில் ஆரோன் ஆன்டர்சன் என்ற 10 வயது சிறுவன் படித்து வருகிறான். இந்த சிறுவனுக்காக மட்டுமே அங்கு இந்த பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி நாட்களில் சிறுவன்

ஒரே மாணவனுக்காக மட்டுமே செயல்படும் பள்ளி: காரணம் என்ன?

ஆரோன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஆசிரியர்களின் முழுக் கவனமும் அவன் மீதே இருக்கும்.

பள்ளியில் அனைத்து வசதிகளும் இருந்தாலும், ஆரோனுக்கு இருக்கும் ஒரே வருத்தம், அவனுக்கு பிடித்த விளையாட்டானா கால்பந்தை அவனுடன் விளையாட யாரும் இல்லை என்பதே. சிறுவன் ஆரோன் மட்டுமே அந்த பள்ளியில் சென்று படித்து வருவதால், இங்கிலாந்திலேயே அதிக பணச்செலவில் கல்வி பயின்று வரும் சிறுவனாக ஆரோன் மாறியுள்ளான்.

தன்னோடு விளையாட எவரும் இல்லை என்ற வருத்தம் சிறுவன் ஆரோனுக்கு உண்டு என்றாலும், அந்த தீவினை விட்டு வெளியேற அவனுக்கு துளியும் விருப்பம் இல்லை என்றே தெரிவித்துள்ளான்.

ஒட்டு மொத்தமாக 70 பேர் மட்டுமே குடியிருந்து வரும் இந்த தீவின் மிக அருகில் இருக்கும் நகரம் என்பது செல்ட்லன்ட் தீவின் தலைநகரமான லீர்வீக் நகரே.

சிறுவன் ஆரோனின் நண்பர்கள் மற்றும் சகோதரர்கள் அருகில் இருக்கும் வேறு தீவுகளில் உள்ள பள்ளிகளில் கல்வி பயின்று வருவதால், ஆரோனுக்கு அவர்களை வாரவிடுமுறை நாட்களில் மட்டுமே சந்திக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது.

வீட்டில் இருந்து சைக்கிளில் 2 நிமிடத்தில் சென்றுவிடும் தூரத்தில் இருப்பதால் ஆரோனின் தினசரி வாழ்க்கை சைக்கிள் பயணத்துடனே துவங்குகிறது.