Published:Updated:

பனிக்கட்டியாக மாறிய சீனாவின் மஞ்சள் ஆறு: கப்பல் போக்குவரத்து பாதிப்பு!

 பனிக்கட்டியாக மாறிய சீனாவின் மஞ்சள் ஆறு: கப்பல் போக்குவரத்து பாதிப்பு!
பனிக்கட்டியாக மாறிய சீனாவின் மஞ்சள் ஆறு: கப்பல் போக்குவரத்து பாதிப்பு!

பெய்ஜிங்: சீனாவின் மிகப்பெரிய நதியான மஞ்சள் ஆறு பருவநிலை மாற்றத்தால் பனிக் கட்டியாக உறைந்து வருவதால் கப்பல் போக்குவரத்துக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

 பனிக்கட்டியாக மாறிய சீனாவின் மஞ்சள் ஆறு: கப்பல் போக்குவரத்து பாதிப்பு!

சீனாவின் இரண்டாவது மிகப்பெரிய நதி, மத்திய சீனாவில் உள்ள மஞ்சள் ஆறு. இதன் இன்னொரு பெயர் சீனாவின் துயரம் என்பதாகும். இதற்கு ஏற்றவாறு இந்த நதி இப்போது பருவநிலை மாற்றத்தில் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளது.

மஞ்சள் ஆறு பாயும் பகுதிகளில் கடும் குளிர் பொழிந்து வருவதால், நதியின் மேற்பகுதியில் முழுவதுமாக பனிக் கட்டிகள், பாளம் பாளமாக மிதந்து செல்கின்றன. இதனால் கப்பல் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பனிக் கட்டிகள் 4 கிலோ மீட்டர் அளவுக்கு பரவி உள்ளது. மொத்த தண்ணீரின் 30 விழுக்காடு அளவிற்கு பனிக் கட்டிகள் உருவாகியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தப் பனிக்கட்டிகள் சாலையோரம் ஒதுங்குவதால் வாகனப் போக்குவரத்தும் இந்தப் பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.