Published:Updated:

ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்த 2 இளம்பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்!

போராளியாகும் ஆசையில் ஐ.எஸ். தீவிரவாத குழுவில் இணைந்த ஆஸ்திரியாவை சேர்ந்த இரண்டு இளம்பெண்கள், பாலியல் அடிமையாக பயன்படுத்தப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்து போராட வேண்டும் என்ற ஆசையில் ஆஸ்திரியாவை சேர்ந்த சமரா மற்றும் சபீனாவும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டு வெளியேறிய இருவரும்,  ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்து, அவர்களின் இணையதளத்தில் முகப்பு பக்கத்தை அலங்கரிக்கும் நிலைக்கு எட்டினர்.
 
ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்த 2 இளம்பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்!

இந்நிலையில் 17 வயதான சமராவுக்கு,  ஐ.எஸ். தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் பிடிக்காமல் போகவே அங்கிருந்து தப்பிக்க திட்டமிட்டுள்ளார். இதனையடுத்து கால்நடையாக எல்லையை கடக்க முயன்ற சமராவை ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் மன்றம் தெரிவித்திருந்தது.

சமரா தப்பிக்க முயற்சிப்பதற்கு முன்னர், ஐ.எஸ். தீவிரவாதிகளால் வலுக்கட்டாயமாக பாலியல் அடிமையாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. புதிதாக அந்த குழுவில் இணையும் தீவிரவாதிகளுக்கு பாலியல் தேவைகளை தீர்த்து வைக்கும் பொருட்டே இவர்களை பெரும்பாலும் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது உலகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்தில்தான் பாலியல் அடிமைகளை எப்படி கையாள வேண்டும் என்று ஐ.எஸ் அமைப்பு கையேட்டுக் குறிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது!