Published:Updated:

கரை ஒதுங்கிய சிறுவன் அவமதிப்பு; சார்லி ஹெப்டோ மீண்டும் சர்ச்சை!

Vikatan Correspondent
கரை ஒதுங்கிய சிறுவன் அவமதிப்பு; சார்லி ஹெப்டோ மீண்டும் சர்ச்சை!
கரை ஒதுங்கிய சிறுவன் அவமதிப்பு; சார்லி ஹெப்டோ மீண்டும் சர்ச்சை!

சர்ச்சைக்குப் பேர்போன ஃபிரெஞ்சுப் பத்திரிக்கையான சார்லி ஹெப்டோ, இறைத்தூதர் சர்ச்சையிலிருந்து வெளிவந்து சில வாரங்கள் கூட ஆகவில்லை; அதற்குள் ஒரு புத்தம்புது சர்ச்சையை உருவாக்கி உள்ளது இந்த வாரப்பத்திரிக்கை.

சில மாதங்களுக்கு முன்னால், சிரியக் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய மூன்று வயதுச் சிறுவனான ’ஆலன் குர்தி’யின் நிழற்படம் காண்பவர் அனைவரையையும் கடும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியது. அந்தக் குழந்தை ஒருவேளை வளர்ந்து பெரியவனாகி இருந்தால், நிச்சயம் பெண்களுக்கெதிராக வன்கொடுமை இழைக்கும் ஒரு குற்றவாளியாகத்தான் வளர்ந்திருப்பான் என்று பொருள்படும்படி ஒரு கேலிச்சித்திரத்தைத் தீட்டி வெளியிட்டிருக்கிறது சார்லி ஹெப்டோ.

இரண்டு ஆண்கள் ஒரு பெண்ணைத் துரத்துவதைப் போல் அமைந்துள்ள இந்தக் கேலிச் சித்திரம், கீழ்க்கண்ட வாசகத்தைக் கொண்டுள்ளது.

கரை ஒதுங்கிய சிறுவன் அவமதிப்பு; சார்லி ஹெப்டோ மீண்டும் சர்ச்சை!



“சின்ன ஆலன் வளர்ந்து பெரியவனாயிருந்தால் என்னவாகி இருப்பான்?   நிச்சயம் ஜெர்மனியில் ஒரு பாலியல் குற்றவாளியாகி இருப்பான்”

அண்மையில் ஜெர்மனியில் பெருகிவரும் பாலியல் வன்முறைகள் தொடர்பாக, சார்லி ஹெப்டோ வின் துணை இதழாசிரியர், ’லாரெண்ட் ரிஸ்’ வரைந்த இந்தக் கேலிசித்திரம் தற்போது ஐரோப்பா முழுவதும் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது; குறிப்பாக நாடு விட்டு நாடு புலம்பெயர்ந்து வாழும் ஐரோப்பியர்களிடையே பலத்த அவநம்பிக்கையையும், மனக்கசப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே ஓர் அவலத்தின் சின்னமாக உலகை உலுக்கிய ஓர் கோரத்தை, இப்படிப்பட்ட கேலிச்சித்திரமாக மாற்றி வெளியிட்டிருப்பதைக் கண்டித்துப் பல்வேறு அமைப்புகள் கருத்து தெரிவித்திருக்கின்றன.

-ச.அருண்
மாணவப் பத்திரிக்கையாளர்.