Published:Updated:

சிறை செல்ல நேரிடும்... நவாஸ் ஷெரிஃப்புக்கு பாக். உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

விகடன் விமர்சனக்குழு

இஸ்லாமாபாத்: நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்தாவிட்டால் பதவி இழக்க நேரிடுவதோடு,  சிறை செல்லவும் வேண்டி இருக்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்பை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கடுமையாக எச்சரித்து உள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் மீது உச்ச நீதிமன்றத்தில்,  அந்நாட்டு சுங்க இலாகா அதிகாரி ஒருவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த அந்நாட்டு உச்ச நீதிமன்ற நீதிபதி அஷ்மத் சயீத், ''நீதிமன்ற உத்தரவுகளை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் நடைமுறைப்படுத்துவதில்லை.

இது தொடர்ந்தால் அவர் பதவி இழக்க வேண்டியிருக்கும். அதோடு, ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் ஏராளமான அறைகள் காலியாகவே உள்ளன, அங்கு அடைக்கப்படுவீர்கள்" என்று  கடுமையான எச்சரிக்கையை விடுத்தார்.