Published:Updated:

விபச்சாரம் செய்ததாக 4 பெண்களை கல்லால் அடித்து கொன்ற ஐ.எஸ் தீவிரவாதிகள்!

விபச்சாரம் செய்ததாக 4 பெண்களை கல்லால் அடித்து கொன்ற ஐ.எஸ் தீவிரவாதிகள்!
விபச்சாரம் செய்ததாக 4 பெண்களை கல்லால் அடித்து கொன்ற ஐ.எஸ் தீவிரவாதிகள்!

மொசூல்: விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 4 பெண்களை கல்லால் அடித்து ஐ.எஸ் தீவிரவாதிகள் படுகொலை செய்துள்ளனர்.

விபச்சாரம் செய்ததாக 4 பெண்களை கல்லால் அடித்து கொன்ற ஐ.எஸ் தீவிரவாதிகள்!

கடந்த சில நாட்களாகவே, ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமுள்ள சிரியா, ஈராக், மற்றும் தலிபான் தீவிரவாதிகள் வசமுள்ள ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் கல்லால் அடித்து கொலை செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஈராக்கின் மொசூல் நகரில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 4 பெண்களை கல்லால் அடித்து, மரண தண்டனை வழங்கி உள்ளனர் ஐ.எஸ் தீவிரவாதிகள்.

விபச்சாரம் செய்ததாக 4 பெண்களை கல்லால் அடித்து கொன்ற ஐ.எஸ் தீவிரவாதிகள்!

ஈராக்கின் மொசூல் நகரில் கடந்த புதன்கிழமை அன்று,  ஐ.எஸ். தீவிரவாதிகள் ரெய்டு நடத்தியபோது ஒரு இல்லத்தில் 4 பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக பிடித்திருக்கின்றனர். மேலும், தங்களது வீரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அந்த பெண்களை, ஷரியா நீதிமன்றத்தின் முன் ஐ.எஸ். தீவிரவாதிகள் நிறுத்தி, அப்பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டி இருக்கின்றனர்.

இது தொடர்பாக விசாரித்த ஷிரியா நீதிமன்ற தலைவர்கள்,  அப்பெண்களை கல்லால் அடித்து கொலை செய்யும்படி மரண தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்து இருக்கின்றனர். இதனையடுத்து, பெரும் திரளாக கூடி இருந்த மக்கள் முன்பாக, அந்த 4 பெண்களையும் அவர்கள் கல்லால் அடித்து படுகொலை செய்திருக்கின்றனர்.