Published:Updated:

பாகிஸ்தான்: மோசமான வானிலை; விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர் - லெப்டினன்ட் ஜெனரல் உட்பட 6 பேர் பலி

விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர் ( ட்விட்டர் )

லாஸ்பேலா மாவட்டத்திலு்ள மலைப் பகுதிக்கு மேலே பறந்துகொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து, சற்று நேரத்தில் மாயமானது.

பாகிஸ்தான்: மோசமான வானிலை; விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர் - லெப்டினன்ட் ஜெனரல் உட்பட 6 பேர் பலி

லாஸ்பேலா மாவட்டத்திலு்ள மலைப் பகுதிக்கு மேலே பறந்துகொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து, சற்று நேரத்தில் மாயமானது.

Published:Updated:
விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர் ( ட்விட்டர் )

பாகிஸ்தான் மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துவரும் சூழலில், தற்போது கனமழை காரணமாக அந்த நாட்டில் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் கனமழையால் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. பலுசிஸ்தானில் கனமழை, வெள்ளம் காரணமாக இதுவரை 478 இறந்திருப்பதாக அரசுத் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அந்த மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று நேற்று முன்தினம் இரவு குவெட்டாவிலிருந்து கராச்சி நகருக்குப் புறப்பட்டுச் சென்றது. ஹெலிகாப்டரில் மூத்த ராணுவ அதிகாரி உட்பட ஆறு ராணுவ வீரர்கள் இருந்தனர்.

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர்
பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர்
ட்விட்டர்

இந்த நிலையில், லாஸ்பேலா மாவட்டத்திலுள்ள மலைப் பகுதிக்கு மேலே பறந்துகொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து, சற்று நேரத்தில் மாயமானது. இதைத் தொடர்ந்து மீட்புப் பணி வீரர்கள் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் மலைப் பகுதியில் மோதி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்தில் பாகிஸ்தான் ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் உட்பட ஆறு பேர் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணையில், மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!