Published:Updated:

ஈக்குவடார் நிலநடுக்கத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 246 ஆக உயர்வு

குய்ட்டோ: தென் அமெரிக்க நாடான ஈக்குவடார் நாட்டில் நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கத்திற்கு பலியானோரின் எண்ணிக்கை 246 ஆக உயர்ந்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈக்குவடாரில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) பயங்கர நிலடுநடுக்கம் ஏற்பட்டது.அது  7.8 புள்ளிகளாக ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக அமெரிக்க புவியியல் மையம் கணித்தது. இந்த நில நடுக்கத்தை தொடர்ந்து பல முறை அதிர்வுகள் ஏற்பட்டன. அதனையடுத்து பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், சுனாமி எச்சரிக்கையை  அறிவித்திருந்தது. பின்னர் அந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.

இந்த நில நடுக்கத்தை தொடர்ந்து முழுவீச்சில் மீட்பு படையினர் களமிறங்கி மீட்பு, நிவாரண பணிகளில் ஈடுபட்டனர். நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 246 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் 2,527 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலரின்  நிலை மோசமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என்ற அச்சம் நீடிக்கிறது.